இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்: ஏற்கனவே எச்சரித்திருந்ததா இந்தியா?
Sunday, April 21st, 2019
இலங்கையில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பில் இந்தியா மத்திய அரசாங்கம் ஏற்கனவே எச்சரித்திருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தினமான இன்று கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய பகுதிகளிலுள்ள தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை பாதுகாப்பு தரப்பின் அலட்சியமான அணுகுமுறையே இவ்வாறான பாரிய அனர்த்தம் ஏற்பட காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக இவ்வாறான பயங்கரவாத நடவடிக்கை குறித்து திட்டம் தீட்டப்பட்டதாக தெரிய வருகிறது. இது தொடர்பான சரியான துப்புகளையும் இந்தியா வழங்கியுள்ளது.
எனினும் இலங்கை பாதுகாப்பு தரப்பு அசமந்த போக்கினை வெளிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இலங்கை புலனாய்வு பிரிவும் கடந்த 11ம் திகதி இந்தத் தாக்குதல் தொடர்பான தகவல்களை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கியுள்ளது. அதில் பல்வேறு அம்சங்கள் குறிப்பிட்டிருந்து போதும் பாதுபாப்பு உயர்மட்டம் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை புலனாய்வு பிரிவு பலமாக செயற்பட்டிருந்திருந்தால் இவ்வாறானதொரு சம்பவம் நடைபெறாமல் தடுத்திருக்க முடியும் என கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டனை குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய கோர சம்பவம் காரணமாக இதுவரை 200 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் பல மடங்காக அதிகரிக்கும் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
|
|
|


