இலங்கையை தாக்க வருகிறது சூறாவளி: எச்சரிக்கிறது வானிலைத் திணைக்களம்!

Thursday, November 30th, 2017

இலங்கை அடுத்த வாரம் பாரிய சூறாவளி தாக்கத்திற்கு முகங்கொடுக்கவுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இரண்டாவது வெப்பமண்டல அச்சுறுத்தல் மற்றும் புதிதாக உருவாகும் அழுத்தம் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்படவுள்ளது. இதனால் இலங்கை மற்றும் இந்தியாவில் பாரிய வெள்ளம் மற்றும் மண்சரிவு அச்சுறுத்தல் காணப்படுவதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கத்தால் இலங்கை முழுவதும் அடைமழை பெய்ததோடு பலத்த காற்றும் வீசியதால் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன.

இந்நிலையில் அடுத்த வாரம் இலங்கை, தென்னிந்தியா, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் தெற்கு கேரளா ஆகிய பகுதிகளில் கடுமையான மழை எதிர்பார்க்கப்படுகின்றது. சுமார் 200 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்போது பாரிய வெள்ள ஆபத்துகள் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related posts: