எதிர்காலத்தில் நான்காவது தடுப்பூசி வழங்கவும் வாய்ப்புள்ளது – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான நாயகம் தெரிவிப்பு!

Tuesday, December 14th, 2021

எதிர்காலத்தில் நான்காவது கொரோனா தடுப்பூசியையும் வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளதென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, பொதுமக்கள் கொவிட் தடுப்பூசி அட்டையை இயன்றளவு கவனமாக பயன்படுத்த வேண்டும் என கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி அட்டையை தரவு களஞ்சியத்திற்கு உள்வாங்கி, QR கோட் முறைமைக்குள் இணைத்து, சில சந்தர்ப்பங்களில், கைத்தொலைபேசி ஊடாகவோ அல்லது வேறு முறைமையிலோ பயன்படுத்தும் வரையில், அதனைப் பாதுகாப்பாக வைத்திருப்பது கட்டாயமாகும்.

எதிர்காலத்தில், மூன்றாம் தடுப்பூசியின் பின்னர், நான்காம் தடுப்பூசியையும் வழங்கவேண்டி ஏற்படலாம்.

அதற்காக தடுப்பூசி அட்டையை லெமினேட் செய்வதை தவிர்க்க வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான வைத்தியர் ஹேமந்த ஹேரத், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts:


பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுற்றறிக்கைக்குள் வரையறைப்படாது உதவிகளைக் கிடைக்கச் செய்யுமாறு ஜனாதிபதிமைத்...
யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா தொற்றின் அபாயம் இன்னமும் நீங்கவில்லை – மக்கள் எச்ச...
சாதாரணதர மாணவர்களின் நலன்கருதி ஜனவரி 25 ஆம் திகதிக்கு பின்னர் தனியார் கல்வி நிலையங்களை திறப்பது தொடர...