இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு பச்சை அனகொண்டாக்கள்!

Friday, May 4th, 2018

இலங்கையின் தேசிய மிருகக்காட்சி சாலையிலிருந்து இந்தியாவின் மைசூர் சமராஜேந்திர விலங்கியல் பூங்காவிற்கு இரண்டு ஆண் மற்றும் பெண் பச்சை அனகொண்டாக்கள்அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய பூங்கா அதிகார மையத்தின் அனுமதியுடன் விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் அடிப்படையில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய ஊடகம்தெரிவித்துள்ளது.

இவற்றின் சுகாதார நிலைமைகள் நல்லமுறையில் உள்ளதாகவும், அவை விலங்கியல் பூங்காவில் தனிமையான இடத்தில் உள்ளதாகவும் பூங்காவின் இயக்குநர் சி. ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த அனகொண்டாக்கள் 6 முதல் 8 அடி நீளமும், 15 கிலோ எடை கொண்டதாகவும் உள்ளது.

இதேநேரம் மைசூர் விலங்கியல் பூங்காவிலிருந்து நான்கு அரியவகை மான்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக பூங்காவின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த விலங்குப் பரிமாற்றம் ஆறு ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்றுள்ளது.

Related posts: