இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பிரித்தானியா பங்களிப்பு!
Wednesday, February 14th, 2018
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் வகையில் பிரித்தானிய நிறுவனங்களுடன் வர்த்தக தொடர்பினை மேம்படுத்துவதற்கான வசதி வாய்ப்புக்களுக்கு ஊக்கமளிக்கப்படும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் (James Dauris) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இலங்கைக்கான விசேட பிரதிநிதியாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயினால் நியமிக்கப்பட்டுள்ள பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் ஜயவர்தன இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரித்தானிய வர்த்தக நிறுவனங்கள் இலங்கை வர்த்தக சமூகத்துடன் இணைந்து வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இரு நாடுகளின் வர்த்தகம் அதிக அளவில் மேம்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
|
|
|


