இலங்கையின் ஐந்து மாவட்டங்கள் வறட்சியால் பாதிப்பு!
Tuesday, February 20th, 2018
தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக நாட்டில் சுமார் இரண்டு லட்சத்து 88 ஆயிரத்து 193 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு வறட்சியால் இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் வாழும் 91 ஆயிரத்து 381 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துமத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக மன்னாரில் 10 ஆயிரத்து 612 பேரும், புத்தளத்தில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 18 பேரும், குருநாகலில் 50 ஆயிரத்து 918 பேரும் அநுராதபுரத்தில் 9ஆயிரத்து 655 பேரும் பொலன்னறுவையில் 990 பேரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் இவர்களுக்கான நிவாரணப் பணிகளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேற்கொள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
Related posts:
யாழ்.நகரில் நாளைமுதல் கடைகளை திறக்க அனுமதி – சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு!
இந்தியாவிலிருந்து திருகோணமலைக்கு எண்ணெய் விநியோக குழாய் மார்க்கத்தை அமைக்க நடவடிக்கை!
பாதாள உலகக் குழுக்களுக்கு அவர்களது மொழியிலேயே பதிலளிக்கப்படும் - பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்க...
|
|
|


