இராணுவ அதிகாரிகளுக்கு அரசியல் பொருத்தமற்றது – அமைச்சர் டிலான் பெரேரா!
Monday, May 1st, 2017
இராணுவ அதிகாரிகளுக்கு அரசியல் பெருத்தமற்றது என்பதை ஜனாதிபதி புரிந்துக் கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இராணுவ அதிகாரிகளுக்கு அரசியல் பொருத்தமற்றது என்பதற்கான உதாரணங்கள் நாட்டின் வரலாற்றில் உள்ளது.அரசியல் நிர்வாகமும் இராணுவ நிர்வாகம் என்பது வெவ்வேறானவை. இதன் காரணமாகவே இராணுவத்தில் இருந்து வந்து தேர்தலில் போட்டியிட்டதால் சரத் பொன்சேகாவை மக்கள் தோற்கடித்தனர்.
இராணுவத்தில் இருக்கும் போது அவர்கள் திறமைசாலிகள். அது சரத் பொன்சேகாவுக்கும் பொதுவானது. கோத்தபாய ராஜபக்சவும் பொதுவானது. ஏனையோருக்கும் அப்படியே. எனினும் இவர்கள் அரசியலுக்கு வந்ததும் முற்றாக தோற்று போய் விடுகின்றனர் என
பதுளை ஹாலி-எல பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் இவ்வாறு டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை அணியின் நிலைமை திருப்திகரமாக உள்ளது - பலமான இலங்கை அணியை உருவாக்குவதே எமது நோக்கம் - விளையா...
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான எந்ந தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை - அமைச்சர் பந்துல குணவர்...
பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக் கொள்ள நடவடிக்க...
|
|
|
தணிக்கைகள் மூலமாக அல்ல, மேற்பார்வை மூலமே கௌரவமான ஊடக கலாசாரத்தை உருவாக்க முடியும் - ஊடகத்துறை அமைச்ச...
இணைய மோசடிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு...
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு - சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்...


