இன மத ரீதியான வன்முறைகளை தடுக்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவு!

Friday, May 26th, 2017

இன மற்றும் மத ரீதியான வன்முறைகள் இடம்பெறுவதை தடுக்குமாறு, அனைத்து காவற்துறை நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது

காவற்துறை மா அதிபரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .இதேவேளை, மதரீதியான வன்முறைகளை துண்டும்வகையில் செயற்படும் குழுக்களை கட்டுப்படுத்த விசேட காவற்துறைப் பிரிவு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன

பிரதமரின் உத்தரவிற்கமைய சட்ட ஒழுங்குகள் அமைச்சு இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதுஇந்த பிரிவில் அதிகாரமிக்க காவற்துறை அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்இந்த குழு, மதரீதியான தாக்குதல்கள் உள்ளிட்ட வன்முறைகள் தொடர்பில் விசாரணை நடத்தவும், அதனைக் கட்டுப்படுத்தவும் ஈடுபடுத்தப்படவுள்ளது

இதற்கிடையில், இவ்வாறான இன மற்றும் மதரீதியான வன்முறைகள் குறித்த புலனாய்வு அறிக்கை ஒன்று, அடுத்த வாரம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கையளிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related posts:

அதிக விலைக்கு மணலை விற்பனை செய்தால் வாகன உரிமையாளர்களின் உரிமங்கள் இரத்து - புவிச் சரிதவியல் அளவை மற...
மின்சார நெருக்கடி எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்டது - துவிச்சக்கர வண்டியை பயன்படுத்துவதும் சிறந்த...
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து ஆராய்வு - அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் ப...