இதுவரை தனிமைப்படுத்தலுக்கு செல்லாது மறைந்திருப்பவர்கள் உடனடியாக அடையாளப்படுத்திக்கொள்ளுங்கள் – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர்!
Saturday, April 4th, 2020
கொரோனா தொற்று சர்ச்சைக்குரிய யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்று இதுவரை தனிமைப்படுத்தலுக்கு செல்லாது மறைந்திருப்பவர்கள் தங்களை உடனடியாக தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ.கேதிஸ்வரன் கோரியுள்ளார்.
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சுவிஸ் போதகர் ஒருவரால் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தற்போது ஒவ்வொருவராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் நெருங்கிப் பழகிய 325 பேர் வரையிலானவர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.இவ்வாறான நிலையில் தற்போது குறித்த தேவாலயத்திற்குச் சென்று இன்றுவரை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் சிலர் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.அவ்வாறு இருப்பவர்கள் பற்றிய தகவல்கள் நமக்கு தெரியப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளன மேலும் அவர்கள் தாமாக முன்வந்து தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள்.
யாழ்ப்பாண மாவட்டத்தை பொருத்தவரையில் கொரோனா தொற்றுஅறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவே தனிமைப்படுத்தப்பட்டு உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு முயற்சிகளை எடுத்துள்ளோம் அந்த அடிப்படையில் தாவடியில் உள்ள ஒரு பகுதியினருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளனர் மேலும் அரியாலைப் பகுதியில் உள்ளவர்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன
இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் முதலாவதாக கொரோனா தொற்றிற்கு இலக்கானவருடன் பழகியவர்கள் என்ற சந்தேகத்தில் தாவடியில் 18 பேர் தனிமைப் படுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த 18 பேருக்கும். கொரோனா தொற்று உள்ளதா எனக் கண்டறியும் வகையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
இதன் பிரகாரம் நேற்றையதினம் மாவட்ட சுகாதாரத் திணைக்களத்தின் ஆளுகையில் உள்ள வைத்தியசாலைகளின் பணியாளர்களும் போதனா வைத்தியசாலைப் பணியாளர்களும் குறித்த பணியில் ஈடுபட்டனர். இதேநேரம் இன்றைய தினமும் சாவற்காடு மற்றும் மானிப்பாய் பகுதியில் உள்ள 12 பேரிற்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


