இடைக்கால அறிக்கை புதிய அரசமைப்பு அல்ல – பிரதமர் ரணில்!

Friday, November 3rd, 2017

இடைக்கால அறிக்கை இறுதிபடுத்தப்பட்ட புதிய அரசமைப்பு அல்ல என் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னரே புதிய அரசமைப்புக்கான சட்டவரைவு தயாரிப்பு பணி ஆரம்பமாகும் என்றும் பிரதமர் கூறினார். புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதம்  நேற்ற நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. விவாதத்தில் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார்.

பண்டா செல்வா மற்றும் டட்லி செல்வா ஒப்பந்தத்தின் ஊடாக அதிகாரங்களை அன்றே வழங்கியிருந்தால் இன்று இப்படியான பின்னடைவு நிலைமை நாட்டிற்கு ஏற்பட்டிருக்காது என்று தெரிவித்த  பிரதமர் சிங்கள மொழி அரச கரும மொழியாகப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட நிலையை சுட்டிக்காட்டிய பிரதமர் , டட்லி செல்வா ஒப்பந்தம் ஏற்பட்டது – என்றார்.

Related posts: