ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் பயங்கரவாதத் தாக்குதல் – 7 பேர் உயிரிழப்பு!

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் உள்ள தேவாலயம் அருகே மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவரை சுட்டு வீழ்த்தியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என போலீசார் தெரிவித்தனர்
Related posts:
கொரோனாவின் தீவிரம் இந்த மாத மத்தியில் குறைவடைய ஆரம்பிக்கும்!
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முப்பெரும் விழா இன்று !
இலங்கையில் அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தில் வெளிப்படைத் தன்...
|
|