ஆசியாவின் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை!
Wednesday, May 9th, 2018
ஆசியாவில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் உறுப்பு நாடுகளில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் முற்போக்கான வரிவிதிப்பு முறைமைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மாநாட்டை பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அதன்தலைவர் டேக்ஹிக்கோ நக்காவோ (Takehiko Nakao) இதனைத் தெரிவித்துள்ளார்.
தனியார் வரி, ஆதன வரி மற்றும் பரம்பரை வரி உட்பட நடைமுறைக்கு ஏற்றவகையிலான வரிகளை அறவிட்டு அதன் மூலம் பிராந்தியத்தின் சமத்துவமான வருவாயினை மேம்படுத்த முடியும்என தெரிவித்துள்ளார்.
அவர் தனது உரையில் பிராந்தியத்தில் தொழில்நுட்ப அபிவிருத்தி காரணமாக பாதிப்படைந்த மக்களின் மேம்பாட்டிற்கு அமைய கொள்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும்வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
|
|
|


