அவுஸ்திரேலியாக் கண்டத்துடன் வர்த்தக உறவைப் பலப்படுத்தும் இலங்கை!

Saturday, June 16th, 2018

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் அங்கமான இலங்கை – அவுஸ்திரேலியா – நியூசிலாந்து சபைவர்த்தக வலைப்பின்னல் நிகழ்வொன்றை எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பில் மேற்கொள்ளவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதான பங்காளர்களாக நியூசிலாந்து வர்த்தக ஆணையாளர் மற்றும் அவரது குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர். இதன்போது நியூசிலாந்துடனான வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை வர்த்தக நிறுவனங்கள் தமது ஏற்றுமதி மற்றும் வழங்கக்கூடிய சேவைகள் குறித்து அறிமுகத்தை நியூசிலாந்து வர்த்தகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

மேலும் இலங்கை வர்த்தகர்கள் நியூசிலாந்துடன் மேற்கொள்ளும் வர்த்தக நடவடிக்கைகளில் பிரச்சினை எதிர்நோக்கும் பட்சத்தில் அதனை தீர்ப்பதற்கான சகல உதவிகளையும் வழங்க நியூசிலாந்து தயாராகவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:

விவசாயிகள் நெல்லை சந்தைக்கு வழங்காமையே அரிசி இறக்குமதிக்கு காரணம் - விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளு...
கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – யாழ். மாவட்ட அரசாங்க அத...
யாழ் - சென்னை விமான சேவையில் இந்தியாவின் மற்றுமொரு முன்னணி நிறுவனம் இணைந்து கொள்ள உள்ளதாக தகவல்!

நெருக்கடியான சூழல்களின்போது அனைவரும் தியாகங்களை செய்ய நேரிடும் - அரச ஊழியர்கள் தொடர்பில் அமைச்சர் ப...
அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் - தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இலகுவாக தீர்வு காண முடிய...
உத்தேச மின்சார சபை சட்டமூலம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு இரகசிய ஆவணமாக சபாநாயகரிடம் கையளி...