அரிசியை தட்டுபாடு இன்றி விநியோகிக்க உத்தரவு!

Wednesday, November 29th, 2017

 

எந்தவித தட்டுபாடுமின்றி அரிசியை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி. ஹெரிசன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்..

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி வாய்மூலம் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த  அமைச்சர் அரிசியை தட்டுபாடு இன்றி விநியோகிக்க ஜனாதிபதி உத்தரவு அரிசிக்கு எந்தவித தட்டுபாடுமின்றி அரிசியை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி. ஹெரிசன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி வாய்மூலம் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த  அமைச்சர். 50,000 மெற்றிக் டொன் நெல்லை பாதுகாப்பு கையிருப்பாக வைத்திருப்பது அரிசிக்கான தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில் விநோகிப்பதற்கே ஆகுமென்றும் அமைச்சர் கூறினார்.

அரிசிக்கு தட்டுபாடு உண்டு. வறட்சியின் காரணமாக எதிர்பார்க்கப்பட்ட அறுவடை கிடைக்கவில்லை. நாம் இந்த பிரச்சினையை எதிர்கொண்டுள்ளோம். சதோச மற்றும் தனியார் துறையினர் அரிசியை இறக்குமதி செய்துள்ளனர்.தட்டுபாடு இன்றி அரிசியை விநியோகிக்க ஜனாதிபதியும் பிரதமரும் தேவையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளர். முன்னர் கேள்வி நடைமுறை முன்னெடுக்கப்ட்டது. நெல்லை சதோச ஊடாக விநியோகிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts: