அத்தியாவசியமற்ற உணவு பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்படும் –  ஜனாதிபதி!

Wednesday, September 27th, 2017

அத்தியாவசியமற்ற உடலுக்கு கேடு விளைவிக்கும் அனைத்து உணவு பொருட்களினதும் இறக்குமதியைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 தேசிய பொருளாதார பேரவையின் ஊடாக இதன்பொருட்டு நடவடிக்கை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும்அவர் குறிப்பிட்டுள்ளார். களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக்கூறியுள்ளார். நாட்டின் பண்பாட்டினையும் தனித்துவத்தையும் பாதுகாத்து எமக்கு தேவையான உணவுபொருட்களை எமது நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டியது கட்டாயமாகும். அத்துடன் உள்நாட்டுவிவசாயிகளின் உற்பத்திக்கு சிறந்த விலையை பெற்றுக்கொடுத்து அவர்களின் பொருளாதாரத்தையும் நாட்டின்பொருளாதாரத்தையும் பலப்படுத்த வேண்டுமாயின் உள்நாட்டு பொருட்களுக்கு கூடுதல் பெறுமதி வழங்கவேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எழுமாற்றான பி.சி.ஆர். பரிசோதனை - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!
பலஸ்தீனுடனான நட்புறவுக் கொள்கையில் எந்தவகையிலும் மாற்றமேற்படாது - வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி...
அரச நிறுவனங்களால் வாடகைக்கு அமர்த்தப்படும் வாகனங்களுக்காக ஆண்டுதோறும் 2.5 பில்லியன் விரையம்!

ஏற்கனவே நிறைவேற்ற முடியாமற் போனவற்றை ஒரே முறையில் பூர்த்திசெய்து கொள்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள் - பொ...
திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க மின்சார சபைக்கு 10 ஏக்கர் நிலம் கொள்வனவு - அமைச்ச...
அமைச்சு - இராஜாங்க அமைச்சு செயலாளர்களுக்கு புள்ளிவழங்கும் முறைமை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தவு...