அண்ணன் அண்ணி கொடூரம்: அநாதையான சிறுவன்!

Tuesday, October 3rd, 2017

உலக சிறுவர் தினமான நேற்று 12 வயது சிறுவன் ஒருவனை  சித்திரவதைக்குட்படுத்திய சிறுவனின் சகோதரன் மற்றும் அவரது மனைவியைக் கலஹா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் சிறுவன் ஒருவனின் அலறல் சத்தம் கேட்டு அயலவர்களினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் குறித்தசிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.

தந்தையை இழந்து தாய் வெளிநாட்டில் தொழில் புரிந்து வரும் நிலையில் கவனிப்பாரின்றி இருந்த 12 வயது சிறுவன் சித்திரவதைக்குட்பட்டுவந்த நிலையில் மிகவும் பரிதாபகரமாக மீட்கப்பட்டுள்ளான்.

சர்வதேசமே ஒக்டோபர் 01 ஆம் திகதியை சிறுவர் தினமாகக் கொண்டாடிய போது இந்தச் செய்தி கலஹா பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. அப் பிரதேசத்தின் கிராம சேகவரின் அலுவலகத்திற்கு பின்புறமாக உள்ள வீடொன்றிலிருந்து சிறுவன் ஒருவன் அழும் சத்தம் கேட்டுள்ளது.

இத் தகவல் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சிறுவனை மீட்டுள்ளனர். அதன்போது சிறுவன் நீண்டநாட்களாக கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளான் என்பது தெரியவந்துள்ளது.

பொல்லுகளாலும் கத்தியாலும் தாக்கப்பட்ட காயங்கள் சிறுவனின் உடலில் காணப்பட்டதுடன் காலில் மரக் கட்டைகள் விலங்குகளாகப்பூட்டப்பட்டிருந்த நிலையில் நடக்க முடியாதபடி வீட்டின் மூலையில் முடங்கிக் காணப்பட்டான்.

தந்தையை இழந்த நிலையில் தாய் வயிற்றுப் பிழைப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளார். 3 ஆம் தரத்தில் கல்வி பயிலும் குறித்த சிறுவன் தனது24 வயதுடைய சகோதரனிடம் ஒப்படைக்கப்பட்டான். பாதுகாப்பளிக்க வேண்டிய சகோதரனும் அவரது மனைவியும் சிறுவனை இவ்வாறு சித்திரவதைப்படுத்தியுள்ளனர். அவர்களது குழந்தைகள் சுகபோகத்துடன் வாழ்ந்து வருவதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸாரினால் மீட்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறுவனின் சகோதரன் மற்றும் அவரது மனைவி ஆகியோர்கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த செய்தி தமது பிள்ளைகளை ஆயாக்களின் பராமரிப்பில் விட்டுவிட்டு தொழிலுக்காகவும் தமது ஆடம்பர அனுகூலங்களுக்காகவும் செல்லம் தாய்மாருக்கு மட்டுமல்ல உறவுகளுக்கும் எச்சரிக்கையாக மட்டுமல்ல மனிதநேயத்தை நேசிக்கவும் பாடமாக அமையட்டும்

Related posts: