அடுத்த மாதம் மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் !
Monday, August 21st, 2017
அடுத்த வருடம் வழங்கப்படவுள்ள பாடசாலை மாணவர் சீருடைக்கான வவுச்சர் உதவித்தொகை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இம்முறை தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சப்பாத்துகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களும் வழங்கப்படும் என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.இந்தச் சலுகையை பெற்றுக்கொள்வதற்கு நாடளாவிய ரீதியில் பத்து இலட்சம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளில் கல்வி கற்று வரும் சுமார் 42 இலட்சம் மாணவர்களுக்கு இலவச சீருடைக்கான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளமை இங்கு குறிப் பிடத்தக்கது
Related posts:
சடலத்தை எடுத்துச் செல்ல பேரம் - யாழ். போதனா மருத்துவமனைப் பணியாளர்கள் நால்வருக்கு கட்டாய விடுமுறை!
கைத்தொழில் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை - ஆளுநர்கள் மற்...
இன்றுமுதல் வடக்கு, கிழக்கு, ஊவாவில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் வாய்ப்பு - சில இடங்களில் பிற்பகலில் அல்...
|
|
|


