அஞ்சலி செலுத்துவது என்பது அனைவருக்கும்  பொதுவானது

Tuesday, May 23rd, 2017

அனைவருக்கும் பொதுவான அஞ்சலி செலுத்துதலில் ஈடுபடும் தமிழ்ர்களைத் தடுத்துநிறுத்துவதைக் கைவிடவும். என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்ட நிறுவனம் என்கின்ற அமைப்பு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது

சிவில் யுத்தத்தில் நினைவுத்தூபியில் முன்  முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்துவதற்கு மரணித்தவர்களின் குடும்பத்தினரையும் சமூகச் செயற்பாட்டாளர்களையும் அச்சுறுத்தி அஞ்சலி செலுத்த விடாமல் தடுக்கும் பொலிசாரின் செயலை அரசாங்கம் எதிர் வரும் காலங்களில் தடுக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு  வலியுறுத்தியுள்ளது. புதனன்று நினைவுத்தூபிக்கு அருகில் மேற்கொள்ளப்படும் எத்தகைய பிரார்த்தனைகளும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவதுடன் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்கும் பங்கம் ஏற்படும் என்ற காரணத்தை முன்வைத்து பதினைந்து நாட்களுக்கு அத்தகைய பிரார்த்தனைகள் எதுவும் குறிப்பிட்ட பிரதேசத்தில் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்று முல்லைத்தீவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இத்தீர்ப்பை எதிர்த்து மேன் முறையீடு செய்யப்பட்டபோது  அந்தக் கல்வெட்டில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று நீதிமன்றில் அரச சார்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

அஞ்சலி செலுத்துவது பொதுவான உரிமை அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்தாலும்,’ அவர்களுக்கு அந்த உரிமை இருக்கிறது என்றும் அந்த அமைப்பின்  நிறைவேற்றுப் பணிப்பாளர் யாஸ்மின் சூக்கா தெரிவித்தார். மரணத்திற்கும் மேலாக தமிழர்களை குற்றவாளிகளாக காட்ட முற்படுகிறது இந்த அரசு,இது முற்றிலும் கீழ்த்தரமானது என்றும் அதிலும் நல்லிணக்கம் பற்றி பேசும் ஒரு நாட்டில்  நடைபெறும் இச்செயல் மிக மோசமானது’ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: