“அக்பார் டவுன்” தேர்தல் தொகுதி “எந்தேரமுல்லை 02” என மாற்றம் ?
Thursday, December 21st, 2017
“அக்பார் டவுன்” என பெயரிடப்பட்ட தேர்தல் தொகுதியை “எந்தேரமுல்லை 02” என மாற்ற, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
மஹர பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் கிராம சேவகர் பிரிவுகள் நான்கை இணைத்து அக்பர் டவுன் என பெயரிட அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதி மக்களின் கையெழுத்துடன் கூடிய மகஜர் ஒன்று அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது, தேர்தல்கள் ஆணையாளருக்கு அழைப்பை மேற்கொண்ட அமைச்சர் முஸ்தபா, குறித்த அந்தப் பகுதியை எந்தேரமுல்லை 02 என மாற்றுவது குறித்து கலந்துரையாடியுள்ளார் என அமைச்சின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Related posts:
ஜனாதிபதித் தேர்தல்: 78,403 வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிரகாரிப்பு - தேர்தல்கள் ஆணைக்குழு!
பொருளாதார நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு முழு நாட்டையும் முடக்க முடியாது - சுகாதார அமைச்சர் தெரிவி...
இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்கின்றேன் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கான வாழ்த்துச்...
|
|
|


