மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் – அம்பலம் இரவீந்திரதாசன்!
Tuesday, July 18th, 2017
வறிய மக்களின் அடிப்படைத் தேவைப்பாடுகளையும் அவர்களது கோரிக்கைகளையும் இனங்ண்டு அவற்றுக்கு துரிதகதியில் தீர்வுகள் காணப்படவேண்டு என்பதே ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நிலைப்பாடாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேசநிர்வாகச் செயலாளர் அம்பலம் ரவீந்திரதாசன் தெரிவித்துள்ளார்.
எமது மக்கள் நாளாந்தம் பல பிரச்சினைகளுக்கும், தேவைப்பாடுகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர். இவற்றுக்கு உரியமுறையில் தீர்வுகாணப்பட வேண்டுமென நாம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுடனும், ஆலோசனையுடனும் செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் என்றும் தெரிவித்தார்.
கொக்குவில் கிழக்கு காளியம்பாள் ஆலய நிர்வாகத்தின் நிர்வாக பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்த பின்னர் கருத்துக் கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு உரியதீர்வுகளைப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.
Related posts:
|
|
|


