கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் – அம்பலம் இரவீந்திரதாசன்!

Saturday, June 3rd, 2017

இணுவில் கிழக்குகோயில் காணிகளில் குடியிருப்போர் எதிர்கொண்டுவரும் இடர்பாடுகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் தொகுதிச் செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் நேரில் சென்றுகேட்டறிந்துகொண்டார்.

அண்மையில் குறித்தபகுதிக்குவிஜயம் மேற்கொண்டிருந்த இரந்திரதாசன் மக்களுடன் கலந்துரையாடி அவர்களது தேவைப்பாடுகள், பிரச்சினைகளைக் கேட்டறிந்துகொண்டார்.

குறிப்பாக குடியிருக்கும் காணிகளுக்கான உரிமப் பத்திரங்கள் இல்லாத காரணத்தினால் வீடமைப்பு வசதிகளைப் பெற்றுக் கொள்வதில் தாம் எதிர்நோக்கும் இடர்பாடுகள் தொடர்பில் மக்கள் எடுத்துவிளக்கினர்.

மக்களது கோரிக்கைகள் தொடர்பில் அவதானஞ் செலுத்திய இரவீந்திரதாசன் குறித்த விடயத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுசென்று உரிய தீர்வினைப் பெற்றுத்தருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுமென தெரிவித்தார்.

Related posts:


நன்னீர் மீன்பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கில், தாண்டிகுளத்திலும் ஒருதொகுதி மீன் குஞ்சுகள் ஈ.பி.டி.பி...
கோணாவில் கிழக்கு ராஜன் குடியிருப்பு மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் குடிநீர்வசதி...
கிராமிய அமைப்புக்களின் பொதுப் பணிக்கான சுயாதீன செயற்பாடுகளில் அரசியல் தலையிடு தவிர்த்து கொள்ளவேண்டும...