அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு சிறார்களுக்கு வங்கிக்கணக்கு ஆரம்பித்துவைப்பு!

Wednesday, November 11th, 2020

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் 63 ஆவது பிறந்தி தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஒருதொகுதி சிறார்களுக்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்கவிப்பதற்காக வங்கிக்கணக்குகள் ஆரம்பித்து கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (10) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது  63 ஆவது அகவையை பூர்த்திசெய்திருந்தார். இதன்பொருட்டு கட்சியின் ஆதரவாளர்களால் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன் ஒரு அங்கமாக சிறார்களுக்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக யாழ். மாவட்டத்தை உள்ளடக்கிய வகையில் தெரிவுசெய்யப்பட்ட ஒரு தொகுதி சிறார்களின் பெயர்களில் சிறுவர் சேமிப்புக் கணக்கான ரன் கெகுளு கணக்கு ஆரம்பித்து வழங்கபட்டு வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மக்களது அடிப்படை பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வேண்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வா...
அனைத்து உறுப்பினர்களதும் சிறப்புரிமைகள் உறுதிசெய்யப்பட வேண்டும் – யாழ். மாநகரசபையில் ஈ.பி.டி.பி வலிய...
நல்லாட்சியின் நாடகம் விரைவில் நிறுத்தப்படும் - கிளிநொச்சியில் ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் வ...

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களது சத்தியப்பிரமாண வைபவ காணொளித் தொகுப்பு.....
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பயனாளர்களுக்கான உதவித் திட்டங்...
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பங்காளிகளாக இருக்கவேண்டுமே தவிர பொதுவேட்பாளர் சூழ்ச்சியில் சிக்கிவிட...