யுத்தத்தால் இந்தியா சென்று மீளவும் இலங்கை திரும்பும் அகதிகளின் வாழ்வியல் நிலை தொடர்பில் ஏதேனும் ஏற்பாடுகளை முன்னெடுக்கின்றதா? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, July 6th, 2018

கடந்த கால யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவிற்குச் சென்றிருந்த இலங்கை அகதிகள் இலங்கை திரும்பிக் கொண்டிருக்கின்ற நிலையில், சட்டவிரோதமாக இலங்கை திரும்புகின்ற அகதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகத் தெரிய வருகின்ற நிலையில் அவர்கள் தொடர்பில் தங்களது அமைச்சு ஏதேனும் ஏற்பாடுகளை முன்னெடுக்கின்றதா? என அமைச்சர் சுவாமிநாதனிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின் போதே மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகார அமைச்சர் கௌரவ டி. எம். சுவாமிநாதன் அவர்களிடம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த ஒரு மாதக் காலப் பகுதிக்குள் 4 தடவைகளில் 24 பேர் சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றே தெரிய வருகின்றது.

மேலும், இலங்கை திரும்பியுள்ள இலங்கை அகதிகளின் பிள்ளைகள் இந்தியப் பிறப்புச் சான்றிதழ்களை கொண்டிருப்பதன் காரணமாக பாடசாலைக் கல்வி வசதிகள் மறுக்கப்படுகின்றதாகவும், இந்தியாவில் கல்வி கற்று ஏ பிளஸ் மற்றும் பிளஸ் 2 பெறுபேறுகளும் கொண்ட பிள்ளைகளுக்கான வேலைவாய்ப்புகளும் மறுக்கப்பட்;டு வருவதாகவும் தெரிய வருகின்றது.

அந்த வகையில் –

இலங்கை அகதிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் எந்த வகையில் முன்னெடுக்கப்படுகின்றன?

சட்டவிரோதமான முறையில் மீள இலங்கை வருகின்ற இலங்கை அகதிகள் கைது செய்யப்படுகின்ற நிலையில், அவர்கள் தொடர்பில் தங்களது அமைச்சு ஏதேனும் ஏற்பாடுகளை முன்னெடுக்கின்றதா?

இலங்கை திரும்புகின்ற மக்களின் பிள்ளைகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு உரிய ஏற்பாடுகளை கல்வி உட்பட்ட ஏனைய அமைச்சுக்களுடன் இணைந்து பொருந்தக் கூடிய வகையிலான ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியுமா? என்பதுடன் மேற்படி மக்கள் இலங்கையப் பிரஜைகளாக சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் அற்ற வiயில் வாழ்வ்தற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியுமா? என்றும் அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார். தெரிவித்துள்ளார்.

Related posts:

இரணைமடு - யாழ்ப்பாணம் குடி நீர் விநியோகத் திட்டத்தை முன்னெடுப்பதில் வேறேதும் தடைகள் உள்ளனவா? -  நாடா...
வடக்கு மாகாண மருத்துவ நிலையங்களிலுள்ள 820 கீழ் நிலை பணியாளர்களை நிரந்தரமாக்குமாறு அமைச்சர் ரவி கருணா...
கடற்றொழிலாளர்களுக்கு 55 அடி நீளமான படகுகளை 50 வீத மானிய விலையில் வழங்கப்படுவது தொடர்பில் குழப்ப நில...

கரடிப்பூவல் கிராம மக்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க முடியுமா? – நா...
இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தூண்டுகின்ற செயற்பாடுகள் தேசிய நல்லிணக்கத்தை நோக்கியதான பயணத்தை சீர...
குறைபாடுகளுள்ள பாடசாலைகளை இனங்கண்டு அவற்றின் பாதுகாப்பை நிரந்தரமாக உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க மு...