மானிய அடிப்படையில் விதை உருளைக் கிழங்கு வழங்க நடவடிக்கை எடுக்க முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

யாழ் மாவட்ட விவசாய மக்களுக்கு கடந்த வருடமும் 50 வீத மானிய அடிப்படையில் அரசாங்கம் 220 மெற்றிக் தொன் வெளிநாட்டு விதை உருளைக் கிழங்கினை வழங்கியுள்ள நிலையில், இந்த வருடமும் கால போக உருளைக் கிழங்கு செய்கைக்கென 50 வீத மானிய விலையில் விதை உருளைக் கிழங்கு வழங்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு வழங்கப்பட்டால் தங்களால் இம்முறையும் மேற்படி செய்கையை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என்றும் யாழ் மாவட்ட உருளைக் கிழங்கு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேநேரம், உள்@ர் உருளைக் கிழங்கு மற்றும் வெங்காய அறுவடைகளின் போது அவற்றின் இறக்குமதி வரியினை அதிகரிப்பதை விடுத்து, அறுவடைக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னரே இறக்குமதி வரியினை அதிகரிப்பதற்கும், இறக்குமதிகளில் போதிய கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், உள்@ர் உருளைக் கிழங்கு மட்டும் வெங்காயச் செய்கையாளர்களினது உற்பத்திகளுக்கான போதிய சந்தைவாய்ப்பு கிடைக்கக் கூடுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த வருடமும் 50 வீத மானிய அடிப்படையில் விதை உருளைக் கிழங்கினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா?
உருளைக் கிழங்கு மற்றும் வெங்;காய உற்பத்திகளின் அறுவடைக் காலங்களுக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பதாக அவற்றின் இறக்குமதி வரிகளை போதியளவு அதிகரிப்பதற்கும், இறக்குமதித் தொகைகளில் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க முடியுமா?
மேற்படி எனது கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் பி. ஹெரிசன் அவர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.
Related posts:
|
|