கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை மின்னிணைப்புகள் வழங்கப்படாதிருப்பது ஏன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Thursday, May 23rd, 2019

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போதைய நிலையில் சுமார் 43 ஆயிரத்து 818 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன என்பதையும், இக் குடும்பங்களில் மீள்குடியேற்றத்திற்குப் பின்னர் 4 ஆயிரத்து 39 குடும்பங்களுக்கு இதுவரையில் மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை என்றும் தெரியவருகின்றது.

இதன் காரணமாக மேற்படி குடும்பங்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன. மேற்படி குடும்பங்களுக்கு மின்னிணைப்புகளை வழங்குவதற்கு துரிதமான நடவடிக்கையினை எடுக்க முடியுமா? ஏன ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்

நாடாளுமன்றில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போதே மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவலு அமைச்சர் அவர்களிடமே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் துரிதமான நடவடிக்கை எடுக்கப்படுமாயின் எப்போது இதனை மேற்கொள்ள முடியும்? இல்லை எனில், அதற்கான காரணம் என்ன? என்பதை அவர் இந்தச் சபைக்கு அறிவிப்பாரா? இல்லையேல் ஏன்? ஏன்றும் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts:


அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டபோதும், தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை...
வடக்கில் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியுமா? ௲ ஜன...
கிளிநொச்சி ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்திற்கு வினைத்திறன் கொண்ட நிர்வாகக் கட்டமைப்புபை விரைவாக ஏற...