கல்வியியலாளர் சேவை பதவியுயர்வுக்கு தமிழ், முஸ்லிம்கள் தகுதியற்றவர்களா – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Thursday, May 4th, 2017

இலங்கை கல்வியியலாளர் சேவை தரம் 2 ii இலிருந்து தரம் 2 கை;கு பதவி உயர்வு வழங்குவதற்கு 2015ஆம் ஆண்டு விண்ணப்பம் கோரப்பட்டு, முன்னைய சேவை பிரமாணக் குறிப்பிற்கு அமைய 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 44 வெற்றிடங்களுக்கென நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டதாகவும், இதில், தமிழ் மொழி மூல தேசிய கல்விக் கல்லூரிகளான யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, தர்கா நகர், அட்டாளைச்சேனை, கொட்டகல ஆகிய கல்விக் கல்லூரிகளிலிருந்து விரிவுரையாளர்கள் தோற்றியிருந்தனர் என்றும், எனினும், மேற்படி பதவி உயர்வு வழங்கப்பட்டோர் பட்டியலில் தமிழ் மொழி மூல விரிவுரையாளர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வரும் நிலையில்,

மேற்படி பதவி உயர்;வு தொடர்பில் தமிழ் மொழி மூல உத்தியோகத்தர்கள் புறக்கணிப்பு இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து விளக்கமளிக்குமாறும், அவ்வாறு இடம்பெற்றிருப்பின் அதற்கான காரணம் என்ன என்பதை தெளிவுபடுத்தமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் (04) நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts:

மும்மொழி அமுலாக்கத்தை உறுதிசெய்வதற்கு கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா
யுத்தத்தால் இந்தியா சென்று மீளவும் இலங்கை திரும்பும் அகதிகளின் வாழ்வியல் நிலை தொடர்பில் ஏதேனும் ஏற்ப...
வடக்கில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அழிவடைந்த உப உணவு பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படாதது ஏன் – நாடாளுமன...

சந்தேக நபர்களாக தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்கு ஏதேனும் நடவட...
வன்னேரிக்குளம் பகுதியில் நெற் களஞ்சியசாலை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க முடியுமா? - நாடாளுமன்றில் டக...
வடக்கு, கிழக்கு பட்டதாரிகளுக்கு இன விகிதாசார அடிப்படையில் அரச தொழில்வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நாட...