வெளிநாட்டில் குடித்தனம் நடத்தியவர் இங்கே ஊழையிடுகின்றார் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காட்டம்!

Friday, October 9th, 2020

“குதிரையின் குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை” என்று சொல்வது போன்று இந்த மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவற்கு தயாராக இல்லை என்பதை மக்கள் தேர்தலில் வெளிப்படுத்தியதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அண்மையில் நாடாளுமன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்லராசா கஜேந்திரன் வெளியிட்ட கருத்துக்களுக்கு காட்டமான முறையில் பதில் அளித்துள்ளார்.

நேற்றையதினம் (08.10.2020) நாடாளுமன்றில் நடைபெற்ற வெளிநாட்டு ஒப்பந்தங்கள் தொடர்பில் எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படுகின்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

இன்றையதினம் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படுகின்றவெளிநாட்டுஒப்பந்தங்கள் தொடர்பிலான சபை ஒத்திவைப்புவேளைவிவாதத்தில் கலந்துகொண்டு,எனதுகருத்துக்களையும் பதிவுசெய்துகொள்வதற்குவாய்ப்புவழங்கியமைகுறித்துமுதலில் எனதுநன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அந்தவகையில்,இன்றையவிடயத்திற்குவருவதற்குமுன்பாகஒருவிடயம் குறித்து எனது கருத்தக்களை முன்வைக்க விரும்புகின்றேன். நேற்றைக்குமுன் தினம் இந்தசபையிலே, நாடாளுமன்றத்தில் அங்கம்வகிக்கின்றஅகில இலங்கைதமிழ் காங்கிரஸ் கட்சியின் கஜேந்திரன், எனது பெயரையும் ,எனது கட்சியின் பெயரையும் குறிப்பிட்டு,நான் இந்தசபையிலே இல்லாதநேரம் பார்த்து, தவறான– அதாவதுஏற்கனவே இத்தகையவர்களால் காலங்காலமாக கூறப்பட்டு, அவற்றில் எவ்விதமான உண்மைகளும் இல்லை என சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட சில அபாண்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 

ஒன்று, இராணுவத்துடன் இணைந்து இயங்கிய ஈ.பி.டி.பி.யின் துணை இராணுவக் குழுவினால் கைதுசெய்யப்பட்டவர்களும், அவர்களிடம் சரணடைந்த, பின்னால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என்பது அவர் தெரிவித்துள்ள விடயங்களில் ஒன்றாகும்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியானது, இராணுவத்தின் துணைப் படையாகவோ, அல்லது அக்கட்சியின் ஒருபகுதி இராணுவத்தின் துணைப் படையாகவோ ஒருபோதும் செயற்பட்டிருக்கவில்லை என்பதை எமது மக்கள் அறிவார்கள். இதைக் குறிப்பிட்டுள்ள அந்த உறுப்பினரும் அறிவார். இந்த நபர் சார்ந்திருந்த வன்முறைக் கும்பலின் செயற்பாடுகளிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக அரச பாதுகாப்பு எமக்கு மட்டுமல்ல, பல்வேறு அமைப்புகளுக்கும், ஏன், அவர் சார்ந்திருந்த அரசியல் கூட்டின் கட்சிகளுக்கும் அப்போது வழங்கப்பட்டிருந்ததை யாவரும் அறிவார்கள். மக்கள் விடுதலைமுன்னணியின் கிளர்ச்சிகளின்போதும்,தென் பகுதியிலேஅரசியல் கட்சிகளுக்கும்,அமைப்புகளுக்கும் இது போன்றஏற்பாடுகளைஅரசாங்கங்கள் செய்திருந்தன.

என்னை கொலை செய்வதற்கென பலதடவைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த தோல்வி கண்ட முயற்சிகளும், எனது சக தோழர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் இரகசியமானவை அல்ல.

காணாமற் போனோருக்கு பரிகாரம் காணப்பட வேண்டும் எனவும், இனியும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்கவேண்டும்  எனவும் இந்தப் பிரச்சினையின் ஆரம்பகாலம் முதற்கொண்டு நாம் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு பகிரங்கமாக வலியுறுத்தி வந்துள்ளதுடன், இதற்கென 1997 களின் ஆரம்பத்தில் இலங்கையில் முதற் தடவையாக சங்கம் ஒன்றையும் நிருவி, செயற்பட்டிருந்தோம்.

இரண்டாவது விடயம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 30 வருடங்களாக இடம்பெற்ற தமிழ் மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இவர், தமிழ் மக்களின் உண்மையான போராட்டத்தை திசைத் திருப்பி, அதனைவன் முறைக் கலாசாரமாக மாற்றியவர்களின் வழிவந்துவிட்டு, இதைக் கூறியிருக்கின்றார் என்பதுதான் வேடிக்கையான விடயமாகும்.

யுத்தம் நிலவியகாலத்தில், வடக்கிலிருந்த இலங்கை இராணுவத்தினருக்கு 40 ஆயிரம் சவப் பெட்டிகளை அனுப்பிவைக்குமாறு இந்தசபையிலே கூவிவிட்டு, எமது மக்களை பலிக்கடாக்களாக்கிவிட்டு, எமது மக்களுக்கு பயனில்லாத தாம் சார்ந்த கூட்டம் தோல்வியைத் தழுவும் என்பதை அறிந்து, அந்தக் கூட்டத்தையும் கைவிட்டுவிட்டு, தான் மட்டும் தப்புவதற்காக முன்கூட்டியே வெளிநாட்டுக்கு தப்பியோடி, அங்கேயே திருமணம் செய்து கொண்டு, குடும்பம் நடத்திவிட்டு, மீளவும் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களைக் காட்டிக் கொடுப்பதற்கும், தான் ஆரம்பத்தில் நாடாளுமன்றம் வந்திருந்த கூட்டுக் கட்சிகளை பலவீனப் படுத்துவதற்குமான இரகசிய வாக்குறுதி சம்பந்தப்பட்வர்களுக்கு கொடுத்தே இலங்கை திரும்பிய இவர், காட்டிக் கொடுப்பது பற்றி கதைப்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கையாக இருக்கின்றது.

இவரைப் போன்ற, எமது மக்களைத் தூண்டிவிட்டு, எமது மக்களையே பலிகடாக்களாக்குகின்ற புல்லுருவிகளை எமது மக்கள் சரிவர இனங்கண்டுகொண்டதால் தான், புலித் தலைமையினது கள்ளவாக்கு முழு ஒத்துழைப்போடு,யுத்தம் நிலவியகாலகட்டத்தில் நாடாளுமன்றம் வந்த இவரை, அடுத்தபொதுத் தேரதலில் எமதுமக்கள் துரத்தியடித்தனர். மீண்டும் எமது மக்களால் ஒதுக்கப்பட்டிருந்த இவர் இவரது கட்சியின் தேசிய அமைப்பாளரின் உழைப்பினால் தேசியபட்டியலில் தொங்கிக் கொண்டு வந்துவிட்டு, மீண்டும் பழைய ஊளைகளை இட்டுக் கொண்டு, அனைத்துத் தரப்பினராலும் வாங்கிக் கட்டிக் கொண்டுவருகிறார்.

எமதுமக்களுக்கு எதையுமே செய்யாமல், வாய்க்குவந்ததை யெல்லாம் கூறி, ஊளையிட்டால், அதனை ஒரு சில தமிழ் ஊடகங்கள் முன்பக்கத்தில்,‘ சீறினார், இடித்தார், கடித்தார், குரைத்தார்” என அடிதடியாக வெளியிட்டாவது தனது இருப்பைத் தக்கவைப்பதற்கே இவரைப் போன்றவர்கள் முயன்று வருகின்றனர்.

என்றாலும், இவரது இம்முறை இத்தகைய எதிர்பார்ப்பானது, கொரோனா செய்திகள் காரணமாக ஏமாற்றப்பட்டுவிட்டது.

தமிழர் போராட்டம் திசைமாற்றப்பட்டு, வன்முறைக் கலாசாரமாக மாற்றப்பட காரணமான இவர்கள், எமது மக்களது பிள்ளைகளில் எத்தனை ஆயிரம் பேரினை கடத்திச் சென்று கொல்லக் கொடுத்திருப்பார்கள்? காணாமற் போகச் செய்திருப்பார்கள்? என்பதை எமது மக்கள் இன்னமும் மறக்கவில்லை.

கருத்துக்களை கருத்துக்களால் ஏற்பவர்கள் நாங்கள். யுத்தகாலத்தின் இடைநடுவில் சமாதான ஒப்பந்தம் நிலவியபோது, எமது மக்களிடையே நல்ல பெயரைச் சம்பாதிருந்திருந்த ஒரு பொலிஸ் அதிகாரியை சமாதானம் பேசுவதற்காக என அழைத்துச் சென்று கழுத்தறுத்து கொலை செய்ததில் முன்னின்ற இவரைப் போல் நாங்கள் ஒருபோதும் செயற்பட்டதில்லை. செயற்படப் போவதுமில்லை.

இவர்களே எமது மக்களை மரணம் வரை விரட்டியடித்துவிட்டு, இறுதியில் கொல்லப்பட்டு, புதைந்தும், புதையாமலும் இருக்கின்ற முள்ளிவாய்யக்கால் மண்ணில் போய் இவர்களே உறுதிப் பிரமாணம் எடுக்கும் அளவுக்கு இவர்களது பித்தலாட்ட அரசியல் இருக்கின்றது என்றால், இவர்களைப் பற்றிவேறு என்ன சொல்ல முடியும்?

இரத்தக் கறைபடிந்த இவரது கொலை, கொள்ளை, நிதிமோசடிகள் தொடர்பில் இவரது கட்சியின் தேசிய அமைப்பாளர் இப்போது பகிரங்கமாக அறிவித்துக் கொண்டிருக்கிறார்.

குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை’ என்று சொல்வார்கள். அந்தவகையில் இந்த மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கும் நிலையில் எமது மக்கள் இனி இருக்கமாட்டார்கள் எனக் கூறி, இன்றையவிடயத்திற்குவருகின்றேன்

சுமார் 2000ம் ஆண்டுகாலமாகதனித்து வமிக்க இறையாண்மை அடையாளத்தைக் கொண்டதான எமது நாடு, அக்காலந்தொட்டேசர்வ தேசதொடர்புகளைக் கொண்டநாடாகவும் திகழ்ந்து வருகின்றது. அந்தவகையில்,அன்றுமுதற்கொண்டு எமது நாட்டின் பெயரில் பல்வேறு துறைகள் சார்ந்தும் பல்வேறு ஒப்பந்தங்களை காலத்திற்குகாலம் ஆட்சிபீடம் ஏறுகின்ற அரசுகளால் செய்துகொள்ளப்பட்டுள்ளன.

1948ஆம் ஆண்டில் பெற்றுக் கொள்ளப்பட்டசுதந்திரத்துடன், பிராந்தியத்தில் உருவாக்கம் பெற்றிருந்த குழப்பமான நிலைமைக்கு எதிராக, பிரித்தானியாவுடன் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்ப ஒப்பந்தம், அதன் பின்னர் 1952 ஆம் ஆண்டில் சீனாவுடன் செய்துகொள்ளப்பட்ட இறப்பர் – அரிசி ஒப்பந்தமாக இருக்கலாம், தொடர்ச்சியாக, கடந்த ஆட்சிக் காலத்தின் போது கூடமிலேனியம் சவால் கூட்டுத்தாபன ஒப்பந்தம், சிங்கப்பூருடனான சீபாஒப்பந்தம், இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தம் போன்றவை தொடர்பிலும் மிக அதிகளவில் பேசப்பட்டிருந்தது.

இந்தநாடுமேற்கொள்ளக்கூடியவெளிநாட்டுஒப்பந்தங்கள் இந்தநாட்டினதும்,நாட்டுமக்களினதும் நன்மைகருதியதாக இருக்கவேண்டும் என்பதில் எமக்குமாற்றுகருத்தில்லை.

எமதுநாட்டின் வளங்களைசுரண்டும் வகையில்,எமதுமக்களைப் பாதிக்கும் வகையில் வெளிநாட்டு ஒப்பந்தங்கள் என்றபேரில் எவ்விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதற்கு எமது ஆதரவு ஒரு போதும் கிடைக்காதுஎன்பதை இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புவதுடன், அத்தகைய தொருநிலைக்கு மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களும், கௌரவபிரதமர் அவர்களும் வழியேற்படவைக்கமாட்டார்கள் என்பதும் எனது நம்பிக்கையாகும். அதேநேரம்,பிரித்தானியாவுடனான இலங்கையின் பாதுகாப்புஒப்பந்தம் இலங்கையினால் முடிவுறுத்தப்பட்டதுபோன்றுசெய்துகொள்ளப்படக்கூடியஅனைத்துவெளிநாட்டுஒப்பந்தங்களும் அவை எமக்கு பாதகமாகவோ, நட்டத்தை ஏற்படுத்தும் வகையிலோ மாறுகின்றபோது, அவற்றிலிருந்துநாம் வெளியேறுவதற்கு இயன்றவகையில் அவைமேற்கொள்ளப்படவேண்டும் என்தையும் இங்குசுட்டிக்காட்டிவிடைபெறுகின்றேன்

Related posts: