செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 3 டிசம்பர் 2011 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Saturday, December 3rd, 2011

கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே!

கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, ஒரு நாட்டின் அரசியலும் சட்டங்களும் கலாசாரப் பண்பாடுகளும் கல்வி மற்றம் கருத்தியல்களும் ஓர் ஆலமரத்தின் கிளைகளாகவும் விழுதுகளாகவும் இருக்கின்றன. ஆனாலும் நாட்டின் பொருளாதாரமே அந்த ஆலமரத்தின் மூலவேர் போன்றது. பொரளாதாரமே மனித சமூகத்தின் அடிப்படை மனித வாழ்வின் எழுச்சி அதுவே. அந்த வகையில் இன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றச் சந்தர்பபம் கிடைத்தமைக்காக மகிழ்ச்சி யடைகின்றேன்.

இந்த நாடு பாரியதொரு யுத்தத்தைக் கடந்து வந்திரக்கின்றது.யுத்தத் தின் வடுக்களையும் சவால்களையும் எமது மக்க்ள சந்தித்த வந்திருக்கின்றார்கள். யுத்தம் இன்று முடிவக்குக் கொண்டுவரப்பட்டு விட்டது. ஆனாலம் அரசியலுரிமைப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சி கள் இன்னமும் நடந்துகொண்டிருக்கின்றன. அது நிறைவேறும் என்ற நம்பிக்கை எமக்க உண்டு.(இடையீடு) உங்கள் மாதிரியான ஆட்கள் இருப்பதனால்தான் இது நடக்கின்றது.(இடையீடு) நாங்கள் தீர்ப்பதற்குகத்தான் இருக்கின்றோம். உங்களைப் போன்ற ஆட்களின்  தடைகளால்தான் அவை எல்லாம் காலம் தள்ளிப்போகின்றன.(இடையீடு) அதற்காகத்தான் அதனைத் தீர்த்து வைப்பதற்கு முயற்சி எடுக்கின்றோம். அதுதான் அன்றைக்குச் சொன்னேன். நாய்கள் குரைத்தாலும் கரவன் தன்பாட்டிலே போகும் என்று..

இன்று நாடு தழுவிய ரீதியிலே பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2012ம் ஆண்டின் வரவ – செலவுத் திட்டமும் அதன் அடிப்படையிலேயே சமர்பிக்கப்பட்டிருக்கின்றது.அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பொறுப்புள்ள ஓர் அமைச்சர் என்றவகையில் இன்று மட்டுமல்ல உரிமைப் போராட்டச்சூழலிலும் சரி, அதற்கு முந்திய சூழலிலம் சரி எப்போதுமே சாதாரண சிங்கள  சகோதர மக்களுடனும் மற்றம் இஸ்லாமிய சகோதர மக்களடனும் சகோதர வாஞ்சசையுடன் செயற்பட்டு வந்தவன் என்ற வகையில் பொருளாதார அபிவிருத்தியானது இந்த நாட்டில் வாழும் சகல மக்களினதும் வாழ்விடங்கள் தோறும் ஆறுபோல் பாய்ந்து பரவவேண்டும் என்றும் அவர்களது வாழ்வு வளமும் எழுச்சியும் பெறவேண்டும் என்றும் நான் விரும்புகின்றேன். இதேவேளை பொருளாதார அபிவிருத்தியிலும் வாழ்வியல் உரிமையிலும் மற்றம் அரசியல் அரசியலுரிமையிலும் இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசம் மக்;கள் சமத்துவம் பெற்றுச் சிறப்பான வாழ்வை அடைவதற்கு வழி செய்ய வேண்டிய வரலவாற்றக் கடமையும் எம்மீதே சுமத்தப்பட்டிருக்கிறது. அதற்கான சிறந்ததொரு வழிகாட்டலைக் கொடுக்க வேண்டிய கடமையையும் காலம் எம்மிடம் வழங்கியுள்ளது. இதற்குத் தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை நம்பிப் பயனில்லை என்பதற்கான சகசப்பான அனுபவங்கள் வரலாற்றில் நிறைந்து கிடக்கின்றன. (இடையீடு) அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கின்றது. ஏனென்றால் நீங்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள். (இடையீடு) எங்களைச் செய்வதற்கு விடுங்கள். நீங்கள்தானே குழப்பிக்கொண்டிருக்கிறீர்கள்.ஆகவே தமிழ் பேசும் மக்களின் பொருளாதார அபிவிருத்தி குறித்து நான் விஷேடமாகக் கவனம் செலுத்த வேண்டியள்ளது.

கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே!

தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைக்காக மட்டுமன்றி அவர்களது பொருளாதார அபிவிருத்திக்காகவும் வாழ்வியல் உரிமைக்காகவும் அன்றாட அவலங்களக்கத் தீர்வு காண்பதற்காகவும் நாம் பன்முக நோக்கடன் இன்றுவரை உழைத்து வருகின்றோம். ஆனால் காலத்திற்கக் காலம் தமிழ் பேசம் மக்களின் வாக்குகளை மட்டும் அபகரித்த வந்த சில சுயலாப அரசியல் தலைமைகள் அரசியல் தீர்வு தவிர வேறெதுவும் தமிழ் பேசும் மக்களுக்குத் தேவையில்லை. பொருளாதார அபிவிருத்தியும் அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வும் வெறும் சலுகைள்ள மட்டுமே என்று கூறி அவற்றை நிராகரித்தது தமிழ் பேசும் மக்களுடைய வாழ்வியல் உரிமைகளுக்குத் தடையாகவே இரு;நது வந்திருக்கிறார்கள். அரசியல் தீர்வு தேவை என்ற அவர்கள் கூச்சலிடுவதுகூட வெறும் தேர்தல் வெற்றிக்கான கோரிக்கையாகவே காணப்படுகின்றது. அதில் உண்மை நோக்கங்கள் இல்லை. சலுகை என்றால் என்ன? உரிமை என்றால் என்ன? இவை தொடர்பாகத் தமிழ் தேசியக் கூட்டமை;பினருக்கப் பாடம் கற்பிக்க வேண்டியிருக்கின்றது.

…(இடையீடு)

உணர்ச்சி பொங்க வீரம் கொப்புளிக்கப் பேசிவிட்டு திருட்டுத்தனமாக அரசாங்கத்தின் பின்கதவைத் தட்டி தமது சொந்தத் தேவைகளை மட்டும் பெற்றக்கொள்வதுதான் சலுகை. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கே சொந்தமான சுயலாப புத்தி. திருவிழாவில் திருடர்கள் தாமே திருடிவிட்டு பக்கத்தில் நிற்பவனைப் பார்த்து திருடன் திருடன் பிடி பிடி என்று கத்திக்கொண்டு ஓடவதைப்போலவே இவர்களுடைய அரசியல் சித்த விளையாட்டு இருக்கின்றது. சமூக பொருளாதார அபிவிருத்தியிலும் இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு சோறும் தேவைப்பட்டது. சுதந்திரமும் தேவைப்பட்டது.

..(இடையீடு)

அபிவிருத்தியும் தேவைப்பட்டது. அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வம் தேவைப்பட்டது. அனைத்துமே உரிமைகள்தான். இவைகளுக் காகவே நாம் அரசாங்கத்தின் உறவுக்குக் கரம் கொடுத்து எமது மக்களுக்கான உரிமைகளுக்குக் கரம் கொடுத்த வருகின்றோம்.

கௌரவ தலைமைதாங்கம் உறுப்பினர் அவர்களே,

தமிழ் பேசும் மக்களின் சமூக பொருளாதார வாழ்வியல் உரிமைகள் நடந்து முடிந்த அழிவு யுத்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.தொழில் ரீதியாகவும் உற்பத்தி ரீதியாகவும் தமிழ் பேசும் மக்க்ள் மீட்சி பெற்று வருவதற்கு விரும்புகின்றார்கள். அவர்களது வாழ்வியல் உரிமைகள் சிறந்து விளங்குவதற்காக உரிய நடவடிக்கைகளத் துரிதமாக முன்னெடுக்க வேண்டியள்ளது. அதற்காக உற்பத்தி முறைகளிலும் தொழில் முறைகளிலும் நவீன தொழில்நுட்ப வசதிகளைக்கொண்ட திட்டங்கள் எவையென ஆராய்ந்து அவற்றைச் செயற்படுத்த வேண்டியுள்ள்து. ஆகவே இன்று நாடு தழுவிய ரீதியில் பொருளாதார அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து அதிகளவு நிதியை யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்வர்கள் என்ற ரீதியில் தமிழ் பேசும் மக்களின் வாழ்வியல் உரிமைகளை உயர்த்துவதற்குப் பயன்படுத்த வேண்டும் என நான் விரும்புகின்றேன். இதனைச் சுலபமாகச் செய்து முடிக்கலாம் என்பது எனது உறுதியான நம்பிக்கை. காரணம் இன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருப்பவர் மாண்புமிகு பெஸில் ராஜபக்ஷ அவர்கள் அவர் எம்மோடு மிகவும் பரிச்சயமானவர் தமிழ் மக்களின் தேவகைளைச் சரியானவகையில் புரிந்து செயலாற்றி வருபவர்.

(இடையீடு)

அவரை நாம் அழைத்த பொழுதெல்லாம் வடக்க  – கிழக்கு மாகாணங்களுக்கு ஓடோடி வந்து சேவையாற்றுபவர். அவர் வடககுக – கிழக்கு மாகாணங்களுக்கு வரும்பொழுதெல்லாம் எம்மையும் அழைத்துப் பேசி எமது மக்களின் பொருளாதார அபிவிருத்திக்காக உழைத்தக் கொண்டிருப்பவர். ஆனால் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை அபகரித்து பாராளுமன்ற நாற்காலிகளை மட்டும் நிரப்பிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நிற்பது அரிது. அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறந்து பொய்விடுகிறார்கள். ஆனால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அவர்கள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை விடவும் அதிக காலம் தமிழ் மக்கள் மத்தியில் நின்ற அவர்களுக்குச் சேவையாற்றி வருகின்றார். அதற்காக நான் தமிழ் மக்களின் சார்பாக அவருக்கு நன்ற தெரிவிக்கின்றேன். அவர் மட்டுமல்ல ஏனைய எந்தவொரு அமைச்சரும்கூட தமிழ் மக்களுக்கு சேவையாற்ற வாருங்கள் என்ற கேட்பதற்கு முன்பாகவே அவர்கள் அங்கு வந்து நின்றார்கள்.அரசாங்கத்துடனும் அமைச்சர்களுடனும் நான் கொண்டிருக்கும் நல்லுறவைப் பயன்படுத்தி சிதைந்துபோன தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளை மறுபடியும் தூக்கி  நிறுத்துவதே எனமுது இலட்சியம்.(இடையீடு) ஏன் நாங்கள் செய்துகொண்டுதான் செயற்படுகின்றோம்.உங்களைப்போல பொய்யாகவும் கபடத்தனமாகவும் வாக்ககளை அபகரிப்பதற்கும் மக்களைப் பலிகொடுப்பதற்கும் நாங்கள் தயாரில்லை.கடந்த காலங்களில் நீங்கள் அதைத்தான் செய்தீர்கள், நீங்கள் பேசிய பொழுது என்ன சொன்னீர்கள்? கத்தி எடுத்தவன் கத்தியால்தான் சாவான் என்றதுபோல கத்தி எடுத்த வேலுப்பிள்ளை  பிரபாகரன் கத்தியால்தான் இறந்தான் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் அன்று என்ன சொன்னீர்கள்? கத்தியை எடுக்கவேண்டிய தேவை இருந்தது என்ற சொல்லி அதனை நியாயப்படுத்தினீர்கள்.(இடையீடு) நீங்கள் சப்ரா நிறுவனத்தை நடத்தி மக்களுடைய பணத்தைச் சூறையாடிவிட்டு இங்கு வந்து கதைக்காதீர்கள். சப்ரா நிறுவனத்தில் இருந்த எவ்வளவு பணத்தைக் கொள்ளையடித்தீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். (இடையீடு) அதுமாத்திரமல்ல. தென்னிலங்கையில்…

(இடையீடு)

இணக்க அரசியல் மூலம் தமிழ் பேசும் மக்களுக்குப் பொருளாதார அபிவிருத்தி முதற்கொண்டு அரசியல் தீர்வுவரை அனைத்தையும் பெற்றக்கொடுப்பதே எனது கொள்கை. 2011ம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் முன்மொழியப்பட்ட ஒரு மில்லியன் வீட்டுத் திட்டங்களை உருவாக்குவதற்கான அபிவிருத்திச் செயற்திட்டமாக நோக்கப்படுகின்ற வாழ்வு எழுச்சி மனைப் பொருளாதார தேசிய நிகழ்ச்சித் திட்டமானது 2012ம் ஆண்டுக்கான வரவு செலவத் திட்டத்தில் 2.5மில்லியன் மனைப் பெருளாதார அலகுகளை உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு பெஸில் ராஜபக்ஷ அவர்கள் இந்நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்தச் செல்வதற்குரிய வழிகாட்டல்களை வழங்கி வருகின்றார். இத்திட்டம் பின்வரும் மூன்று முறைகளை உள்ளடக்குகின்றது. ஒன்று வீட்டுத்தோட்டம், மற்றையது கால்நடை, கோழிவளர்ப்பு மற்றும் கடற்தொழில். அடுத்தது குடிசைக் கைத்தொழில். ஒரு மில்லியன் மனைப் பொருளாதார அலகுகளை வடக்கு – கிழக்கு உட்பட அகில இலங்கை பூராகவம் எல்லா மாவட்டங்களிலும் செயற்படத்துவதற்கு அவசியமான முன்னெடுப்புக்கள் மற்றும் செயற்பாடுகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன. இவ்வேலைத்திட்டமானது யுத்தத்தினால் பாதிக்கபட்ட பிரதேச மக்களு;ககுப் பெரிதும் உதவும். அவர்களது வாழ்வாதாரத்தை மேலும் வலுப்படுத்தம் என்பது உறுதி. மாண்புமிகு சுமத்திரன் அவர்கள் சபையிலிருந்து ஓடிவிட்டார் போல இருக்கிறது.

(இடையீடு)

எனது பாரம்பரிய கைத்தொழில் மற்றம் சிறகைத்தொழில் முயற்சி அபிவிரத்தி அமைச்சு, பொருளதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் மேலும் 4 அமைச்சுக்களுடன் இணைந்து குடிசைக் கைத்தொழிலை உருவாக்கி வலுப்படுத்தம் பொறுப்பில் பங்காளிகளாகச் செயற்படுவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். அதாவது எனது அமைச்சடன் கைத்தொழில் வாணிப அமைச்சு தொழில்நுட்ப மற்றம் ஆராய்ச்சி அமைச்சு, இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி  அமைச்சு, மற்றும் அரச வளங்கள் தொழில்முயற்சி  அபிவிருத்தி அமைச்சு என்பன இக்குடிசைக் கைத்தொழில் திட்டத்தினை அமுலாக்குவதற்குப் பங்காளர்களாக ஒன்றிணைத்து செயற்படுத்தவது வரவேற்கத்தக்காகும். குடிசைக் கைத்தொழிலை மேம்படுத்தும் உபாயத் திட்டத்தின் முதலாம் படிமுறையாகத் தொழில்நுட்பக் கண்காட்சியும் விழிப்பணர்வு நிகழ்ச்சித்திட்மும் இடம்பெறுகின்றன. தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகள் ஏனைய ஆர்வம் உடையவர்கள் மற்றும் பாடசாலை  மாணவர்கள் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட அழைக்கப்ட்டுள்னர். இத்தகைய கண்காட்சியில் கிராமங்கள் பாரிய பங்கினை வகிக்கின்றன. இதனடிப்படையில் பயனாளிகள் தாம் விரும்பும் குடிசைக் கைத்தொழில் முயற்சியை தெரிவுசெய்ய வசதி செய்யப்படுவதுடன் அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களு;கத் தொழில்நுட்ப முகைமைத்துவப் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகின்றது. அத்துடன் 10,000ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் பொதியும் வழங்கப்படும்.மேலும் இவர்கள் வங்கிகளுடன் இணைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான நிதியைப் பெறவும் வசதி செய்து கொடுக்கப்படும்.அத்துடன் சந்தைப்படுத்தல் வசதிகளைச் சக்திப்படுத்தும் நோக்குடன் தனியார் துறையினரும் வர்த்தக சம்மேளனங்களைச் சேர்ந்தவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கபற்றுகின்றனர். முதலாவது குடிசைக் கைத்தொழில் நிகழ்சசித்திட்டம் ஒரு முன்மாதிரி.

….(இடையீடு)

எமது மக்களின் பிரச்சினைகளைத் தீராப் பிரச்சினைகளாக்கித் தொடர்ந்தும் கொதிநிலையில் வைத்துக்கொண்டு ததமிழ் மக்க்ளின் வாக்குகளை அபகரிப்பதே அவர்ளது நோக்கம். 7கட்சிகள் அவர்களது கூட்டில் உள்ளன. 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் சார்பாக இந்த நாடாளுமன்றில் இருக்கிறார்கள். அந்த 14 உறுப்பினர்களும் 14 கட்சிகள் போல் செயற்படுகிறார்கள். ஒருவர் சிங்களம் தமிழ் பேசம் மக்களு;ககுமத் தீர்வு தராது. என்ற கூறுவார் மற்றவர் அதை மறுத்துப் பேசுவார்.இவ்hறு அவர்களிடையே தமிழ் Nபுசும் மக்க்ளின் அரசியல் தீர்வு விடயத்திலும் ஒருமித்த நிலைப்பாடு இல்லை. அரசாங்கத்திடம் அதிகாரப் பகிர்வு கேட்கின்றார்கள். அது அதை அடைவதற்காக அலல் என்பதும் அவர்களது தேர்தல் கோஷம் இது என்பதும் வேறு விடயம்.ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கள் அதிகாரப் பகிர்வைக் கொண்டிருக்கவில்லை என்பதுதான் வேடிக்கை. நீயா, நானா? என்ற போட்டியும் கூட்டமைப்பில் தமது கட்சிக்கே பிரதான உறுப்புரிமை என்ற பதவி மோகங்களும் அவர்களிடம் மேலோங்கி நிற்கின்றன.

(இடையீடு)

நேரம் போதாமையால் எனது மிகுதி உரையைச் சபையில் சமர்ப்பிக்கின்றேன். நன்றி வணக்கம்.

3 டிசம்பர் 2011

Related posts:

எதிர்காலத்தில் இலவசக் கல்வி இல்லாது போய்விடுமோ? நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!
வடக்கு மகாகாண அபிவிருத்தி மந்தகதியாகியிருக்கிறது – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெ...
தமிழரின் பிரச்சினை தீர்ந்துவிட்டால் கூட்டமைப்பிற்கு பிழைப்புக்கே வழியிருக்காது - நாடாளுமன்றில் டக்ள...

போதைப் பொருள் கடத்தல், விற்பனை அதிகரித்துள்ள குடாநாட்டில் இலக்குவைக்கப்படுகின்ற இளைஞர்கள் நிலை மோசம...
களுத்துறை கன்னங்கர பாடசாலை தமிழ்ப் பிரிவின் இன்றைய நிலை கவலைக்கிடமானது - டக்ளஸ் தேவானந்தா சபையில் தெ...
சலுகைகள் வேண்டாம்: எமது மக்களுக்கு வளங்களை மீள ஒப்படைத்தால் போதும - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலிய...