சுய உற்பத்தித் துறையை ஊக்குவித்து மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தை ஈட்டுவதே எமது இலக்கு – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Friday, November 27th, 2020

சுய உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதன் ஊடாக மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தை ஈட்டுவதே எமது முதன்மை இலக்காகவுள்ளது. இந்த இலக்கினை கூடிய விரைவில் எட்டுவதுடன், அதன் மூலமாக ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தை’ எமது மக்கள் அடையலாம் என எண்ணுகின்றேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் கடற்றொழில் அமைச்சு தொடர்பான வரவு – செலவுத் திட்டம் தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

இன்றைய தினம், கடற்றொழில் அமைச்சு தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு, எமது அமைச்சின் மூலம் எடுக்கப்பட்டுள்ள பணிகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பணிகள் தொடர்பில் விளக்கங்களை இந்த சபையில் முன்வைப்பதற்கு வாய்ப்பினை வழங்கியமை தொடர்பில் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களது ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ எனும் கொள்கை வழி அடிப்படையில் எமது கடற்றொழில் அமைச்சினது செயற்திட்டங்களை நாம் முழுமையாக முன்னெடுத்து வரும் காலகட்டத்தில், உலகமயத் தொற்று அனர்த்தமான கொவிட் 19 கொரோனா தொற்றின் இரண்டாம் அலை எமது நாட்டு மக்களையும் பாதித்து வருகின்ற நிலையில், இத் தொற்று குறிப்பாக எமது கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரம் குறித்தும் பாரியதொரு வீழ்ச்சி நிலையை ஏற்படுத்திவிட்டது.

குறிப்பாக, பேலியகொட மத்திய மீன் விற்பனைக் கட்டிடத் தொகுதியில் கொவிட் 19 கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது, படிப்படியாக மக்கள் மத்திக்கு சென்றடைந்த தகவல்கள் போ~hக்கான மீன் உணவின் மீதான சந்தேகத்தை அம் மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதாக அமைந்து விட்டமை துரதிஸ்டவசமாகும். அதேநேரம், மீன் தொடர்பிலான மக்களின் வீண் சந்தேகத்தை அகற்றும் வகையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் கௌரவ திலிப் வெதஆராச்சி அவர்கள் மேற்கொண்டிருந்த துணிந்த முயற்சி பாராட்டுக்குரியது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

வருடத்தில் செப்ரெம்பர் மாதம் முதற்கொண்டு நவம்பர் இறுதி வரையிலான காலகட்டமானது, மிக அதிகளவிலான கடலுணவு அறுவடைக்குரிய காலகட்டம் என்பதால், அறுவடை செய்யப்படுகின்ற கடலுணவு உற்பத்திகளை போதிய அளவில் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கென எமது கோரிக்கைக்கு அமைவாக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் முதற்கட்டமாக இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்;கு ஒதுக்கியிருந்த 200 மில்லியன் ரூபா நிதியைக் கொண்டு, இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தை ஈடுபடுத்தி, எம்மால் குளிரூட்டி களஞ்சியப்படுத்தக்கூடிய கொள்ளவுக்கு ஏற்ப கடலுணவு உற்பத்திகளை நாம் கொள்வனவு செய்து வருகின்றோம். அதேநேரம்,பழுதடைந்த குளிரூட்டிகளை திறுத்துகின்ற அதேவேலை எதிர்காலத்திற்கு தேவையான குளிரூட்டிகளை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியிலும் ஈடுபடுகின்றோம.;

இவ்வாறு களஞ்சியப்படுத்தப்பட்டு வரும் கடலுணவு அறுவடைகளை எதிர்காலத்தில் வரக்கூடிய திருநாட் காலங்களிலும், அடுத்து வரக்கூடிய கடலுணவு அறுவடைகள் வெகுவாக குறைந்த காலங்களிலும் பொது மக்களுக்கு தட்டுப்பாடுகளின்றி விநியோகஞ் செய்யக்கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

அதேநேரம், கருவாடு உற்பத்திக்கெனவும் குறிப்பிட்டளவு தொகை மீன்கள் கருவாட்டு உற்பத்தியாளர்களால் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளுக்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், எமது நாட்டு கருவாடு, மாசி மற்றும் ரின் மீன் உற்பத்திகளை தரம் கூடிய வகையில் தயாரிப்பதற்கான வழிகாட்டல்களை முன்னெடுத்துவரும் அதேவேளை, கருவாடு தயாரிப்பதற்கென உலர்த்தும் இயந்திரங்களை அறிமுகஞ் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

பேலியகொட மத்திய மீன் விற்பனைச் சந்தையை சுகாதார விதிமுறைகளின் பிரகாரம் வெகு விரைவில் மீளத் திறப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அந்த வகையில் சில அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கான ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேற்படி மீன் விற்பனைச் சந்தையின் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோருக்கான சுகாதார வசதிகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் இந்த விற்பனைச் சந்தையை திறப்பதற்கு எண்ணியுள்ளோம் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அதே வேளை இந்த சந்தையின் எதிர்காலத்தில் ஏற்பட இருக்கின்ற சனநெருக்கடியை குறைப்பதற்கு நாட்டின் ஏனைய ஐந்து பகுதிகளிலும் மேலதிக சந்தைகளை அமைக்க இருக்கின்றோம்.

மேலும், கரையை அண்டிய கடற்பகுதிகளில் மீனின உற்பத்தியை அதிகரிப்பதற்கான விஞ்ஞான ரீதியிலான பொறிமுறையொன்றினை அறிமுகஞ் செய்தல்,  கந்தர, வெல்லமன்கர, பலப்பிட்டிய, ஹிக்கடுவ, அம்பலங்கொட, காலி, மிரிஸ்ஸ, நிலாவெளி, அம்பாந்தோட்டை, சுதுவெல்ல, தொடந்தூவ, மயிலிட்டி, வாழைச்சேனை போன்ற மீன்பிடித் துறைமுகங்களை புதிதாக அமைத்தல் நவீனமயப்படுத்தல் மற்றும் விஸ்தரித்தல், பருத்தித்துறை, குருநகர், பேசாலை மீன்பிடித் துறைமுகங்களை அமைத்தல், ஒலுவில் துறைமுகத்தை மீன்பிடித் துறைமுகமாக மாற்றியமைத்தல் மற்றும் தேவையின் அடிப்படையில் புதிய மீன்பிடித் துறைமுகங்களை அமைத்தல், சர்வதேச கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் வகையில் தேசிய நிறுவனங்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்குதல் மற்றும் ஊக்குவித்தல், ரின் மீன் கைத்தொழிலை மேம்படுத்துவதற்கென தனியார்த்துறை நிறுவனங்களையும், முதலீட்டாளர்களையும் ஊக்குவித்தல், உற்;பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் நியாயம் கிட்டுகின்ற வகையில், கடலுணவு உற்பத்திகளுக்கான விற்பனை அபிவிருத்தி நடவடிக்கைகளை விரிவுபடுத்தல், கடற்றொழிலாளர்களுக்கென பயனுள்ள வங்கி மற்றும் காப்புறுதி முறைமையொன்றை அறிமுகஞ் செய்தல், கடல்சார் பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்தி இளைஞர், யுவதிகளுக்கென கடற்றொழில் தொடர்பிலான தொழிந்நுட்ப மற்றும் முகாமைத்துவப் பயிற்சி நெறிகளை செயற்படுத்தல், கடற்றொழிலாளர்களின் நலன்புரி நடவடிக்கைகளை விரிவுபடுத்தல் போன்ற விN~ட முதன்மைப் பணிகள் நம்முன் இருக்கின்றன.

அத்துமீறிய, சட்டவிரோத கடலிலும் உள்@ர் நீர் நிலைகளிலும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றவர்களை அதிலிருந்து தவிர்த்துக் கொள்ளும் நோக்கில், எமது அமைச்சு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் மற்றும் தேசிய நீர்வாழ் உயிரின ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகவர் (Nயுசுயு) நிறுவனத்துடன் இணைந்து கடற்றொழில் நடவடிக்கைகள் தொடர்பில் ஒழுங்குவிதிகளை  வகுத்து வருகின்றது.

குறிப்பாக, இலங்கையின் அனைத்துக் கடற்பகுதிகளையும் ஆராய்ந்து, அந்தந்தப் பகுதிகளில் அறுவடை செய்யக்கூடிய மீனினங்களின் அப்படிடையில், அவற்றை பிடிப்பதற்கான முறைமைகளை வறையறை செய்து, அவற்றை நடைமுறைப்படுத்துவது முக்கிய நோக்கமாகும். இந்த ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துவதற்கென போதிய ஆளணிகளை இணைத்துக் கொள்ளவுள்ளோம். இந்த ஒழுங்கு விதிகள் வகுக்கப்பட்டு, உரிய அனுமதிகளைப் பெறுவதற்கு முன்பாக, அது தொடர்பில் இந்த நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு அது குறித்து தெளிவுபடுத்துவதும் எமது நோக்கமாகும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அவற்றுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எல்லைத்தாண்டிய மற்றும் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடுவதை இல்லாதொழித்தல், கடற்படையினர் மற்றும் கடலோரப் பாதுகாப்பு அலகினை வலுப்படுத்தல், வெளிநாட்டு கடற்றொழிலாளர்களுடனான முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருதல் போன்ற முதன்மை பணிகளும் எம்முன் உள்ளன.

வெளிநாட்டு இழுவை வலைப் படகுகளின் எல்லைத்தாண்டியதும், தடைச் செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதும், கடல் வளத்தை அழிக்கினற மற்றும் எமது கடற்றொழிலாளர்களின் தொழில் சார்ந்த உபகரணங்களுக்கு சேதம் விளைவிப்பதுமான நடவடிக்கைகள் காரணமாக எமது கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஒரு கிலோ கடலுணவை இழுவை வலைப் படகுகளின் மூலம் அறுவடை செய்கின்ற நிலையில் 18 கிலோ கடலுணவு வேளாண்மையின் ஆரம்ப கட்டங்கள் அழிக்கப்படுகின்றன எனவும், வருடந்தோறும் இவர்கள் எமது கடல் பரப்பிலிருந்து சுமார் 48 முதல் 50 வரையிலான மெற்றிக் தொன் கடலுணவுகளை அபகரிப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது ஒரு பாரிய பிரச்சினைகயாகவே எமது கடற்றொழில் துறையில் தொடர்கின்றது. இது தொடர்பில் நான் ஏற்கனவே தெரிவித்திருந்ததைப் போல், பாக்கு நீரினைப் பகுதியில் கடல் வளம் தொடர்பிலான ஓர் ஆய்வினை இரு நாட்டினதும் சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்களைக் கொண்டு மேற்கொள்வதற்கும், அதன் பின்னர் அந்த ஆய்வின் பெறுபேறுகளுக்கு அமைவாக ஓர் முகாமைத்துவ அலகொன்றினையும் செயற்படுத்தும் திட்டம் இருக்கின்றது. எமது பிரதமர் கௌரவ மகிந்த ராஜபக்ச அவர்களுடன் இந்திய விஜயத்தை மேற்கொண்டிருந்தபோது இத் திட்டம் தொடர்பில் இந்தியப் பிரதமர் கௌரவ நரேந்திர மோதி அவர்கள் முன்னிலையில் நான் தெரிவித்தபோது, இத்திட்டத்தை இந்தியத் தரப்பினரும் வரவேற்றிருந்தனர்.

ஏற்கனவே, இலங்கை அரசுக்கும் இந்தியத் தரப்பினருக்கும் இடையில் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தைகள் 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் மூன்று தடவைகள் இடம்பெற்றுள்ளன. அந்த பேச்சுவார்த்தைகளை மீள தொடரும் எதிர்பார்ப்புடன் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றேன். அந்த வகையில் கூடிய விரைவில் இப் பேச்சுவார்த்தை மீளத் தொடரப்பட்பட்டு, இப் பிரச்சினைக்கு நிரந்தரத்த தீர்வு எட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. ஏற்கனவே, கச்சதீவில் வைத்தும் இந்திய மற்றும் இலங்கை கடற்றொழிலாளர்களை முன்னிலைப்படுத்தியும் நான் ஒரு தடவை பேச்சுவார்த்தை நடத்தியிருந்த அனுபவமும் எனக்குண்டு என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதேநேரம், இலங்கையில் கைப்பற்றப்பட்டுள்ள இந்திய இழுவை வலைப் படகுகளினால் எமது கடல் பகுதிகளுக்கும், கடற்றொழிலாளர்களுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கூடிய விரைவில் இத்தகைய பாதிப்புகளை அகற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆழ்கடல் கடற்றொழிலை பரவலாக மேற்கொள்ளத்தக்க வகையில் பயிற்சிகளை வழங்கி, அதற்குரிய படகுகள், கருவிகள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுக்கவுள்ளோம்.

நவீன தொழில்நுட்பத்துடன் கூடியதாக கடற்றொழிற்துறையை மேம்படுத்த வேண்டியத் தேவை மிக அதிகளவில் உணரப்பட்டுள்ள நிலையில், கொவிட் 19 கொரோனா தொற்று பரவல் தொடர்கின்ற நிலையிலும், சுகாதாரப் பாதுகாப்புடன் அதற்குரிய நடவடிக்கைகளை நாம் ஆரம்பித்துள்ளோம். அதேநேரம், தற்போதுள்ள கடற்றொழிற்துறை சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளையும் நாம் மேம்படுத்தி வருகின்றோம்.

குறிப்பாக கடலுணவு வகைகளை அறுவடை செய்வது முதற்கொண்டு, அதனை கரையில் இறக்கி, போக்குவரத்தில் ஈடுபடுத்தி, நுகர்வோருக்கு வழங்குவது வரையில் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தவுள்ளோம். இதன் மூலம், தரமான கடலுணவு வகைகளை எமது மக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்வதும், உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையில் அவற்றை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதும் எமது நோக்கமாகும். அதேவேளை எமது நாட்டின் பொருளாதாரத் துறைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் ஏற்றுமதி தொடர்பில் அதிக அவதானங்களைச் செலுத்தி வருகின்றோம்.

மீன்பிடித் துறைமுகங்கள், நங்கூரமிடும் தலங்கள், இறங்கு துறைகள் போன்றவற்றில் நவீன தொழில்தொடர்பு வசதிகள், குளிரூட்டல் அறை வசதிகள், எரிபொருள்  விநியோக வசதிகள், சுகாதார பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட உட்கடமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், அவற்றின் கடல் வான்களை புனரமைப்பது, ஆழப்படுத்துவது, அனைத்து மீன்பிடித் துறைமுகங்களிலும் வருடா வருடம் தடைகளை ஏற்படுத்துகின்ற மணலை அகற்றுவது, மற்றும் புதிதாக கடற்றொழிலில் இணைகின்ற கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கு நவீனப் படகுகள் மற்றும் வலைத் தொகுதிகளை வழங்கி, சர்வதேச கடல், ஆழ்கடல் மற்றும் கரையோர கடற் பகுதிகள் சார்ந்த கடற்றொழிலை மேம்படுத்தி, பரவலாக்குவது எமது இலக்காகும்.

அந்த வகையில் கரையை அண்டியதான கடற் பரப்பினில் மீன் வாழ் பகுதிகளை இலகுவில் கண்டறிந்து கொள்வதற்கென தேவையான மென்பொருள் கருவிகளை வழங்குதல், சூழலுக்கு பாதிப்பில்லாத குறைந்த எரிபொருள் சிக்கனம் கொண்டதும், மற்றும் சூரிய சக்தியை பயன்படுத்தத்தக் மேம்படுத்தப்பட்ட படகுகள், இயந்திரங்களை அறிமுகஞ் செய்தல், அவற்றை பரவலாக்குதல், இனங்காணப்பட்ட பகுதிகளில் மீனினங்களை ஈர்ப்பதற்கான மீனின ஈர்ப்பு சாதனங்களைப் (குயுனு – குiளா யுபசநபயவழைn னுநஎiஉந) பொருத்துதல், மீனினங்களின் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்துவதற்கென இரசாயணகூடமொன்றினை அமைத்தல் போன்ற செயற்பாடுகளையும் முன்னெடுக்க உள்ளோம்.

அதேநேரம், குறைவேற்பட்டுள்ள மீனினங்களின் தொகையினை அதிகரிக்கும் நோக்கில் குஞ்சுகளை வைப்பிலிடல், மீன் இனங்களையம், அவற்றின் தொகைகளையும் இனங்காண்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளல், அறுவடைகள் மேற்கொள்ளப்படாத மீனினங்களை அறுவடை செய்தல், மீன் இனங்களையும், அவற்றின் தொகையினையும் அறிந்து கொள்வதற்கான கருவிகள் மற்றும் தொழில் நுட்பத்தை வழங்குதல், தூண்டில் இறைக்கான மீனினங்களை இறக்குமதி செய்வதைவிடுத்து, தேசிய ரீதியில் அவற்றை பிடிக்கின்ற, பேற்றுக்கொள்ள கூடிய செயற்பாடுகளை பரவலாக்குதல் போன்ற செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சர்வதேச கடல் மற்றும் ஆழ்கடல் கடற்றொழிலை மேலும் ஊக்குவிப்பதற்கென தேசிய நிறுவனங்களை அதில் ஈடுபடுத்தும் ஏற்பாடுகளுடன், நீள் வரிசை (டுழபெ டுiநெ) கடற்றொழில் முறைமைக்கு மேலதிகமாக கைத்தடி தூண்டில் வரிசை (Pழயட டுiநெ) முறைமையை அறிமுகஞ் செய்வதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், மீனினங்களை பெருக்கும் வகையில் பயன்பாட்டுக்கு உதவாத பேரூந்துகள்,; ரயில் பேட்டிகள், ரயில் எஞ்சின்கள மற்றும் பழுதடைந்த படகுகள்  போன்றவற்றை கடலில் வைப்பிலிடும் ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், அனைத்து பல நாட் களங்களுக்கென  அவதானிப்பு தொழில் நுட்பக் கருவிகளை (ஏஆளு – ஏநளளநட ஆழnவைழசiபெ ளுலளவநஅ) பொருத்துவதற்கும், ரேடியோ கருவிகளை வழங்குவதற்கும் தற்போது உரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் கடல் நீரை குளிரூட்டி அறுவடைக்குப் பின்னரான கடலுணவுகளை பல நாட் படகுகளில் பாதுகாப்புடன் வைத்து, கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றோம்.

நன்னீர் வேளாண்மையை தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் சூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையில் விரிவுபடுத்துவதும், அதனை மனைப் பொருளாதாரமாக அதாவது, வீட்டுத் தோட்டச் செய்கையாகவும் மேற்கொள்வது எமது இலக்காகும். அத்துடன், பயிர்ச் செய்கையுடன் இணைந்த வகையில் நன்னீர் வேளாண்மையை அறிமுகஞ் செய்து, அதனை ஊக்குவிப்பதற்கான ஏற்பாடுகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். அந்த வகையில், தற்போது ஏறத்தாள 15 வீதமாக இருக்கின்ற நன்னீர் வேளாண்மையை ஏறத்தாள 30 வீதமாக எதிர்வரும் இரு வருடங்களில் உயர்த்துவதற்கு உத்தேசித்துள்ளோம்.

அந்த வகையில், தம்புள்ளை மரபணு அபிவிருத்தி மத்திய நிலைய உட்கட்டமைப்பு வசதிகள், மன்னார், பங்கதெனிய, அம்பாந்தோட்டை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள கடலட்டை, பாலை மீன் (வேக்கெயா), இறால் மற்றும் கடலுணவு கருத்தரிப்பு நிலையங்களின் பணிகளைப் பூர்த்தி செய்தல், குளங்கள், களப்புகள் மற்றும் மேட்டு நிலங்களை அண்டியப் பகுதிகளில் நன்னீர் வேளாண்மையை விருத்தி செய்வதற்கான திட்டங்கள், இங்கினியாகல, கலாவெவ, தம்புள்ள, நுவரெலியா, வெலிகந்த, இரணைமடு மற்றும் உடவலவ்வ நீரியல் வாழ் வேளாண்மை நிலையங்களை மேம்படுத்தல், முருத்தவெல மற்றும் தம்புள்ள மரபணு நிலையங்களின் நீர்வாழ் உயிரின குஞ்சுகளின் உற்பத்தி கொள்ளளவை 2 மில்லியன்களால் அதிகரித்தல், நீரேந்துப் பகுதிகளில் நீர்வாழ் உயிரினக் குஞ்சுகளை வைப்பிலிடல், போன்ற திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

அத்துடன், டீழை குடழஉ தொட்டி முறை வேளாண்மை, Pநn ளுலளவநஅ – ஊயபந ளுலளவநஅ போன்ற அடைப்புகள் மற்றும் கூடுகள் வேளாண்மை, உடனடி பாவனைக்கான சமைத்த மீனை ரின்களில் அடைக்கும் உற்பத்தி முறைமை உள்ளிட்ட முறைமைகள் பலவற்றையும் முன்னெடுக்கவுள்ளோம்.

இவ்வாறு கடற்றொழிற்துறை நடவடிக்கைகள் சார்ந்த வசதிகளை மேற்கொள்கின்ற சமகாலத்தில் கடற்றொழிலாளர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் கடற்றொழிலாளர்களது சங்கங்களது மேம்பாடு கருதியும் பல்வேறு செயற்திட்டங்களை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.

அந்த வகையில், கடற்றொழில் சார்ந்த மகளிர் சங்கங்களை வலுப்படுத்தல், செயற்பாடுகளை இழந்துள்ள கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்தல், ‘கடற்றொழில் ஊக்குவிப்பு’ (தீவர திரிய) கடன் திட்டத்திற்கு பங்களிப்பாற்றுவதன் மூலமாக கடற்றொழில் சார்ந்த உதவித் திட்டங்கள், கடற்றொழிலாளர்களுக்கான  ஓய்வூதியங்களை வழங்கும் வகையிலான முறைமையை செயற்படுத்தல், கடற்றொழிலாளர்களுக்கான காப்புறுதி மற்றும் வங்கி முறைமையை செயற்படுத்தல், கடற்றொழிலாளர் கிராமங்களில் சனசமூக நிலையங்களை அமைத்தல் மற்றும் புனரமைத்தல், மகளிர் மற்றும் சிறுவர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொள்ளல்,  கடற்றொழிலாளர்களைக் கொண்ட பகுதிகளில் பாடசாலைகளைவிட்டு இடைவிலகிய இளைஞர், யுவதிகளுக்கென தொழிற் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகளையும் முன்னெடுக்கவுள்ளோம். அதேநேரம், கடற்றொழில் தொடர்பிலான பாரம்பரிய மற்றும் நவீன தொழில்நுட்ப முறைமைகளை பாடநெறியாக பாடசாலை மட்டத்திலிருந்து செயற்படுத்துவதற்கும் உத்தேசித்துள்ளோம்.

இம்முறை வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இந்நாட்டிலுள்ள கடற்றொழில் மற்றும் நன்னீர் வேளாண்மைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடி விஜயத்தை மேற்கொண்டு, அங்கு வாழுகின்ற துறை சார்ந்த மக்களுடன் கலந்துரையாடி, மேலும்; தேவைகள் மற்றும் பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றை நிவரத்திப்பதற்கும் நான் திட்டமிட்டுள்ளேன் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

சுய உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதன் ஊடாக மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தை ஈட்டுவதே எமது முதன்மை இலக்காகவுள்ளது. இந்த இலக்கினை கூடிய விரைவில் எட்டுவதுடன், அதன் மூலமாக ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தை’ எமது மக்கள் அடையலாம் என எண்ணுகின்றேன்.

அந்த வகையில், எமது ஜனாதிபதி மேன்மைதங்கிய கோட்டாபய ராஜபக்ச அவர்களது தலைமைத்துத்தினாலும். எமது பிரதமர் கௌரவ மகிந்த ராஜபக்ச அவர்களது வழிகாட்டலினாலும். எனது அமைச்சின் இராஜாங்க அமைச்சர் கௌரவ கஞ்சன விஜேசேகர அவர்களின் முன் முயற்சியினாலும், அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்நாயக்க, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களப் பணிப்பானர் திரு. கஹவத்த, அமைச்சு அதிகாரிகள், அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் தலைவர்கள், உள்ளிட்ட அதிகாரிகாரிகள் அனைவரதும் பங்களிப்புடனும் இந்தப் பணிகளை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகின்றேன்.

நன்றி,

வணக்கம்.

Related posts:

13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் புதிய அரசியலமைப்பின் பிரகாரம் உருவாகும் தீர்வை...
சமுர்த்திப் பயனாளிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு  பண வீக்கத்தை எதிர்கொள்ளப் போதாது - நாடாளுமன்றத்தி...
மலையக மக்களின் உரிமைகளைப் பறிக்கத் துணைபோனவர்கள் தமிழர்களின் உரிமைகள் பற்றி பேச அருகதையற்றவர்கள் - ந...

பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி மக்களுக்கு பாதிப்பாக அமையக் கூடாது - டக்ளஸ் தேவானந்தா சபையில் வலிய...
உண்ணாவிரதமிருக்கும் தமிழ்க் கைதிகளின் கோரிக்கையை அரசாங்கம் விரைவாக நிறைவேற்ற வேண்டும் - நாடாளுமன்றில...
மலர்ந்தது தமிழரசு என்றவர்கள் எமது மக்களை கையேந்திகளாகவே வீதிகளில் நிறுத்தியுள்ளனர் - டக்ளஸ் எம்.பி ச...