8 அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டமையை எதிர்த்து ஸ்பெயினில் ஆர்ப்பாட்டம்
Saturday, November 4th, 2017
ஸ்பெயினில் இருந்து சுதந்திர கட்டலோனியா தனி நிர்வாகமாக வேண்டும் என்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிராந்திய எட்டு அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்பெயின் உயர் நீதிமன்றத்தில் முன்னிலையான அதிகாரிகள் கட்டலோனியா மக்களுக்கு துரோகம் செய்துள்ளதுடன், பொது நிதியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இந்த நிலையில் பதவி இறக்கப்பட்ட கட்டலோனியா தலைவர் கால்ஸ் பியூக்டிமொன்ற், (Carles Puigdemont) கைது செய்யப்பட வேண்டும் என அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது பெல்ஜியத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பாக்தாத்தில் கார் குண்டு தாக்குதல் - 64 பேர் பலி
சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 17 பேர் கைது – மலேசியாவில் சம்பவம்!
இஸ்ரேலிய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள் உயிரிழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கனேடிய பிர...
|
|
|


