50 ஆண்டு கால மோதலுக்கு முற்றுப்புள்ளி!

Friday, June 24th, 2016

ஐம்பது வருடகால மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பெரும் முயற்சியாக கொலம்பிய அரசும் ஃபார்க் போராளிகளும் கூட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர்.

ஐ.நா பொது செயலாளர் பான்கி மூன் உட்பட பல வெளிநாட்டு பிரமுகர்களுடன் இணைந்து கியூபாவில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் கொலம்பியா அதிபர் யுவான் மானுவல் சாண்டோஸ் மற்றும் ஃபார்க் தலைவர் டிமொஷென்கோ, ஆகியோர் கூட்டாக கலந்துகொள்ள உள்ளனர்.

இருதரப்பினரும் வரும் புதன்கிழமையன்று அறிவிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிட உள்ளனர்.. மூன்று வருட அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. இரு தரப்பு மோதல்களால் இதுவரை 2 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 70 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

Related posts: