23 போலி பல்கலைக்கழகங்கள் – பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு!
Thursday, July 25th, 2019
இந்தியாவில் 23 அங்கீகாரமற்ற போலி பல்கலைக்கழகங்கள் உள்ளதாக அந்நாட்டு பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 8 பல்கலைக்கழகங்கள் உள்ளன.
பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.) செயலாளர் ரஜினிஷ் ஜெயின் இது தொடர்பில் தெரிவிக்கையில்;
“நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளை மீறி அங்கீகாரமற்ற பல்கலைக்கழகங்கள் போலியாக செயல்பட்டு வருகின்றன. இப்போதைக்கு நாட்டில் 23 பல்கலைக்கழகங்கள் அங்கீகாரம் இல்லாமல் பெயரளவுக்கு சுயமாக வடிவமைத்துக் கொண்டு போலியாக செயல்படுகின்றன. மாணவர்கள் இந்த பல்கலைக்கழகங்களில் சேர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்..” எனத் தெரிவித்துள்ளார்.
Related posts:
பெல்ஜியத்தில் பொலிஸார் மீது கத்திக்குத்து!
பெலாரஸுடனான தனது எல்லைப் பாதுகாப்பை கடுமையாக்கும் உக்ரைன்!
மிக மோசமான தீவிரவாத தாக்குதலாக கருதப்படும் செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்து இன்றுடன் ...
|
|
|


