2001 அமெரிக்க வர்த்தக மைய தாக்குதலில் சவுதி அரசுக்கு தொடர்பா?

Saturday, July 16th, 2016

உலகையே அதிர வைத்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் நடத்தினர், இந்த தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியவர்களில் ஒருவரான ஷகாரியாஸ் மொசாய் என்பவருக்கு அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து கொலோரபோவில் உள்ள சிறையில் அடைத்தது.

இந்நிலையில், இவர் பரபரப்பான வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார், அதில், அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலுக்கு சவுதி அரேபியா மன்னர் குடும்பத்தின் முக்கிய அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட அளவு நிதி உதவி அளித்தார்கள் என தெரிவித்துள்ளார். ஆனால் இதனை மறுத்துள்ள சவுதி அரேபியா அரசு, இந்த விவகாரத்தில் சவுதி அரேபிய அரசுக்கோ, அதிகாரிகளுக்கோ, மன்னர் குடும்பத்துக்கோ எந்த வித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில், இரட்டை கோபுர தாக்குதலில் சவுதி அரசுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்த விசாரணையை அமெரிக்க அரசு முடுக்கிவிட்டது. இதன் முடிவில், இரட்டை கோபுர தாக்குதலில் சவுதி அரசுக்கு தலையீடு இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related posts: