200 கோடி மக்கள் அசுத்தமான குடிதண்ணீரை அருந்துகின்றனர்-உலக சுகாதார அமைப்பு

Sunday, April 16th, 2017

உலகத்தில் உள்ள மக்களில் சுமார் 200 கோடி பேர் அசுத்தமான தண்ணீரையே பருகி வருதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெிரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 200 கோடி பேரில் 2 லட்சம் மக்கள் கழிவுகளிலிருந்தே குடி நீரினை பெருகின்றனர். வருடாவருடம் அசுத்தமான குடிநீரை பருகும் 5 லட்சம் பேர் வயிற்றுப்போக்கால் மரணரமடைகின்றனர். வறட்சி அதிகமுள்ள ஆபிரிக்க நாடுகளில் அசுத்த தண்ணீரின் பயன்பாடு மிக அதிகமாகவுள்ளது என்று அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகின்றது. சுத்தமான நீரும், சுகாதாரமும் கிடைக்க உலக நாடுகள் இணைந்து வியத்தகு முன்னேற்றங்களை மேற்கொள்ள வேண்டும். உலக நாடுகள் ஒன்றிணைந்து இந்த முக்கிய பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். அனைவரும் சுத்தமான நீரை பருக, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய வாழ்விற்கு அனைத்து நாட்டு அரசுகளும் தனி தொகையை ஒதுக்கி அதற்கான வேலைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் பொதுச் சுகாதாரத் துறையின் தலைவரான மரியா நெய்ரா தெரிவித்துள்ளார்.

Related posts: