2 அடி உயரம் கொண்ட பிரபல ஹாலிவுட் நடிகர் மறைவு!
Monday, April 23rd, 2018
2 அடி உயரம் மட்டுமே உள்ள பிரபல ஹாலிவுட் நடிகர் வெர்னே ட்ராயர், 1994-ம் ஆண்டு முதல் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். பல வெற்றிப் படங்களில் நடித்த இவர் ஹாரி பாட்டர்,ஆஸ்டின் பவர்ஸ் போன்ற திரைப்படங்கள் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றார்.
உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உயிரிழந்துவிட்டதாக அவரது செய்தி தொடர்பாளர், ட்விட்டர் மற்றும் முகப்புத்தகத்தில்பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவில், வெர்னே காலமாகிவிட்டார் என பெரும் சோகத்தோடும், நம்பமுடியாத கனத்த இதயத்தோடும் எழுதுகிறேன். வெர்னே மிகவும் அக்கறையானவர். எப்பொழுதும் அனைவரையும்புன்னகை நிறைந்த முகத்துடன் சந்தோசமாக சிரித்து பார்க்க வேண்டும் என நினைப்பவர்” என பதிவிட்டிருந்தார்.
Related posts:
பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுங்கள்- பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அழுத்தம்!
அமெரிக்காவின் இராஜாங்க செயலாளரின் இந்திய பயணம் ஆரம்பம்!
மெக்சிகோ ஷைபஸ் மாகாணத்தில் பாரிய நில அதிர்வு – ரிக்டர் அளவுகோலில் 6.4 மெக்னிடியூட்டாக பதிவானது அமெரி...
|
|
|


