2ஜி அலைக்கற்றை முறைக்கேடு வழக்கு – தீர்ப்பு வெளியானது!

Thursday, December 21st, 2017

ஜி எனப்படும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில், இந்தியாவின் முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசா மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

டில்லி மத்திய புலனாய்வு பணியக சிறப்பு நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன

இந்த வழக்கில் எவ்விதமான குற்றச்சாட்டுமே நிரூபிக்கப்படவில்லை என்றும், போதுமான ஆதாரங்கள் இல்லை என்ற அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருமே வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்துள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்ட 16 பேரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்

காங்கிரஸ் தலைமையிலான முன்னாள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆ.ராசா பதவி வகித்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்தது

இந்த முறைகேடு காரணமாக, அரசாங்கத்துக்கு 1.76 லட்சம் கோடி இந்திய ரூபா இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டதுஇதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையால் ஆ.ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார்

பின்னர் அவர் 2011 கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த வழக்கில் ஆ.ராசா, திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமுன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும் 3 தனியார் நிறுவனங்கள் மீதும் மத்திய புலனாய்வு பணியகம் வழக்கு தொடர்ந்துள்ளது

அத்துடன், அமுலாக்கத் துறையும் தனியே வழக்குப்பதிவு செய்துள்ளது.இது தொடர்பான வழக்குகளை, டில்லியில் உள்ள மத்திய புலனாய்வு பணியக சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.

கடந்த 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கின் விசாரணை, கடந்த  ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி முடிவுக்கு வந்தது.இந்த நிலையில், இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு நடந்த ஊழல்களில் மிகப் பெரிய முறைகேடு வழக்காக இந்த 2ஜி அலைக்கற்றை முறைக்கேடு வழக்கு பார்க்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Related posts: