1600 விமான சேவைகள் இரத்து : மக்கள் அவலம்!
Monday, November 26th, 2018
கடுமையாக வீசும் பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் 1600 விமானங்கள் இன்று இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று முதல் மத்திய அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீசி வருவதுடன், பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு மாநிலங்களில் பனிப்புயல் காரணமாக இன்று 10 அங்குலம் அளவிற்கு பனிப்படலம் படர வாய்ப்பு இருப்பதாகவும், சில மாநிலங்களில் 12 அங்குலம் அளவிற்கு பனிப்படலம் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பனிப்புயல் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் 1600க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், சிகாகோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிகபட்சமாக 770 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. 15000 விமானங்கள் மிகவும் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.
Related posts:
|
|
|


