16 இடங்களை குறி வைத்துள்ள வடகொரியா அச்சத்தில் அமெரிக்கா!

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. இதனால் கடும் கோபத்தில் இருக்கிறது அமெரிக்கா.
அணு அயுத சோதனை மற்றுமின்றி ஹைட்ரஜன் குண்டு சோதனைகளிலும் வடகொரியா ஈடுபட்டு வருகிறது.இதனால், அமெரிக்கா மட்டுமின்றி சில உலக நாடுகள் வடகொரியாவின் இந்த செய்லால் அதிருப்தியில் உள்ளது.
இந்நிலையில், வடகொரியாவின் அணு ஆயுத தாக்குதல் இலக்காக அமெரிக்காவின் நியூயோர்க், வெள்ளை மாளிகை உள்ளிட்ட 16 பகுதிகளுக்கு குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதல் பட்டியலில் அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் அதிகார வட்டத்திற்குள் வரும் சில பிரதேசங்கள் உள்ளன என தெரிய வந்துள்ளது.
வடகொரியா குறிவைத்துள்ள பகுதிகள் அனைத்தும் குடியிருப்புகள் பகுதியாக இருப்பதால் இதனால் கடும் விளைவுகளை ஏற்படக்கூடும்.ஒன்பது ஆண்டுகளுக்கு பின், வட கொரியாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் மீண்டும் சேர்த்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த வாரம் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|