13,000 ஈராக்கியர் மொசூல் நகரிலிருந்து வெளியேற்றம்!
Friday, January 6th, 2017
இஸ்லாமி தேசம் குழுவிடம் இருந்து மொசூல் நகரை மீட்கும் ஈராக் இராணுவத்தின் இரண்டாம் கட்ட படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின் கடந்த ஐந்து நாட்களுக்குள் அந்த நகரில் இருந்து 13,000க்கும் அதிகமான பொதுமக்கள் வெளியேறியுள்ளனர்.
இராணுவ நடவடிக்கை தீவிரமடைந்திருக்கும் நிலையில் நகரில் இருந்து இடம்பெயர்வோரின் எண்ணிக்கை 50 வீதமாக அதிகரித்திருப்பதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது. இதன்படி நாளொன்றுக்கு சுமார் 1,600 தொடக்கம் 2,300 பேர் வரை வெளியேறி வருகின்றனர்.
மொசூல் நகரம் மீதான படை நடவடிக்கை கடந்த இரண்டு வாரங்கள் முடங்கிய நிலையில் ஈராக் இராணுவம் மீண்டும் அதனை ஆரம்பித்துள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபரில் இந்த படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் நகரின் 60 வீதமான பகுதி மீட்கப்பட்டிருப்பதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இந்த யுத்தம் காரணமாக நகரில் வசிக்கும் 1.5 மில்லியன் மக்களில் சுமார் 130,000 பேர் மொசூல் நகர் மற்றும் அதனை சூழ உள்ள பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்திருப்பதாக ஐ.நா பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
|
|
|


