100 கி.மீ. வேகத்தில் காந்த சக்தியால் இயங்கும் அதிவேக ரயில்
Tuesday, May 10th, 2016
சீனாவில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காந்த சக்தியால் இயங்கும் அதிவேக ரயில் அடுத்த மாதம் முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது சீனாவில் “புல்லட் ரயில்” சேவையில் உள்ளது. இந்த ரயில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை என குறிப்பிடப்படுகின்றது.
ஹுனான் மாகாணத்தில் உள்ள சங்ஷா நகரில் முதன் முதலில் செயற்படவுள்ள இந்த ரயிலே அந்நாட்டிலுள்ள அதிவேகம் கூடிய ரயில் என கூறப்படுகின்றது.
மணிக்கு 100 கி.மீட்டர் வேகத்தில் இயங்கும் திறன் படைத்த இந்த ரயிலில் 365 பேர் பயணம் செய்யலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
செவ்வாய்க்கிழமை வரை விமான நிலையம் மூடப்படும்!
13 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி!
சீனாவுடன் பேச்சுவார்த்தை - ட்ரம்ப்!
|
|
|


