480 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக பெறுவதற்கு அனுமதி!

Wednesday, October 30th, 2019

அமெரிக்க அரசாங்கத்தின் மிலேனியம் சாவால்கள் (Millennium Challenge Corporation) கூட்டுதாபனத்திடம் இருந்து 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக பெறுவது தொடர்பில் நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு நகரில் நிலவும் வாகன நெரிசலை முகாமைத்துவம் செய்தல், நாடு முழுவதும் வீதி கட்டமைப்புகளை ஏற்படுத்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல் அத்துடன் நாடு முழுவதும் உள்ள காணிகளை நிர்வகத்தை மேம்படுத்தல் ஆகிய செயற்பாடுகள் இந்த மானிய நிதியின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த மானிய நிதியை பயன்படுத்தி செயற்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் நாட்டின் தேவையை உணர்ந்து அதற்கேற்றால் போல் நாட்டின் வரி அமைச்சு மற்றும் அந்தந்த துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டுள்ளன.

மிலேனியம் சாவால்கள் (Millennium Challenge Corporation) கூட்டுதாபனம் இது குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாட்ட பின்னரும் தேவைகளுக்கு ஏற்றவாறு அதில் குறிப்பிடபட்டுள்ள திட்டங்களை மாற்றியமைக்கும் இயலுமை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அமெரிக்க மக்களிடம் இருந்து இவ்வாறான நிதியை பெற்ற 37 ஆவது நாடாக இலங்கை அமைந்துள்ளது. அமைச்சரவை வழங்கிய அனுமதிக்கமைய அமைச்சர் மங்கள சமரவீர இது குறித்த ஒப்பந்தத்தில் எதிர்காலத்தில் கைச்சாட்திடவுள்ளதுடன் அது 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கவுள்ளது.

மிலேனியம் சாவால்கள் (Millennium Challenge Corporation) கூட்டுதாபனத்திடம் இருந்து குறித்த மானியத்தை பெற்றுக்கொள்ளும் பேச்சுவார்த்தை கடந்த 2001 ஆம் ஆண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பமானது.

இதற்கமைய குறித்த பேச்சுவார்த்தை நிதி அமைச்சிக்கும், ஆஊஊ உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்றதுடன் இது குறித்த இறுதி தீர்மானம் பிரதமர் அலுவலகத்தில் எடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

Related posts: