ஹொங்காங் போராட்டம்: தலைமை தாங்கியவர் கைது!

ஹொங்காங்கில் நடந்து வரும் போராட்டத்தில், போராட்டக்காரர்களின் வழிகாட்டுதலாகவும், தலைமை தாங்கியவராகவும் இருந்த ஆர்வலர் ஜோஷ்வா வாங் கைது செய்யப்படுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹொங்காங்கில் குற்றம் செய்த வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.
குறித்த இந்த சட்ட திருத்த மசோதாவை முழுமையாக இரத்துசெய்ய வேண்டும். போராட்டக்காரர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்ககூடாது என வலியுறுத்தி இரண்டு மாதங்களுக்கு மேலாக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜனநாயகத்துக்கு ஆதரவாக செயல்படும் ஆர்வலர் ஜோஷ்வா வாங் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை ஜோஷ்வாவின் அரசியல் அமைப்பான டெமோசிஸ்டோ தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த போராட்டம் தொடங்கியது முதல் இதுவரை சுமார் 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டக்காரர்களின் வழிகாட்டுதலாகவும், தலைமை தாங்கியவருமான ஜோஷ்வா வாங் கைது செய்யப்பட்டிருப்பது, அவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related posts:
|
|