போரை நிறுத்த துருக்கி இணக்கம்!
Friday, October 18th, 2019
வடக்கு சிரியாவில் போர் நிறுத்தத்துக்கு துருக்கி இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் துருக்கி ஜனாதிபதி ரிசெப் தயீப் எர்டோஹனுக்கும் இடையில் அங்காராவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
குர்திஷ் படைகள், வடக்கு சிரியாவிலிருந்து பின்வாங்குவதற்காக இந்த இணக்க்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, போரானது 5 நாட்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளது.
குர்திஷ் படைகளை, பாதுகாப்பான பகுதி என்று குறிப்பிடப்படுவதிலிருந்து பின்வாங்குவதற்கான நடவடிக்கைகளுக்கு அமெரிக்க உதவும் என்று மைக் பென்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும், குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் அதற்கு இணங்குவார்களா என்பது தெளிவற்றதாக உள்ளதென சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
கடத்தப்பட்ட நான்கு இந்தோனேஷிய மாலுமிகளும் குடும்பத்தோடு இணைந்தனர்!
பயங்கரவாதத்தை எதிர்கொள்ள அதிரடி திட்டத்தை அமுல்படுத்திய பிரான்ஸ்..!
இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு : ஐரோப்பிய பாராளுமன்ற துணைத்தலைவர் கைது!
|
|
|


