பாகிஸ்தான் வைத்தியர்களை வெளியேற்றும் சவுதி அரேபியா !

Saturday, August 10th, 2019

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. குறிப்பாக அதன் வரத்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் பாரிய பின்னடைவை சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில், பாகிஸ்தானின் மருத்துவ பட்டப்படிப்பு தரமானதாக இல்லையென கூறி அதன் அங்கிகாரத்தை சவுதி அரேபிய சுகாதாரத்துறை அமைச்சகம் இரத்து செய்துள்ளது.

இது தொடர்பில் சவுதி அரேபிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாகிஸ்தானின் முதுகலை மருத்துவ மேற்படிப்பு, சவுதி அரசின் சுகாதார நெறிமுறைகளுக்கு ஏற்புடையதாக இல்லையென தெரிவித்துள்ளது. மேலும் M.S மற்றும் M.D படித்துவிட்டு சவுதியில் பணியாற்றுபவர்களின் ஒப்பந்தததை இரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளது.

சவுதி அரேபிய அரசின் இந்த அதிரடி முடிவின் காரணமாக அங்குள்ள நூற்றுக்கணக்கான வைத்தியர்கள் வேலையிழக்கும் அபாயத்தில் உள்ளனர்.

Related posts: