தொழுநோய் மையத்தில் 32 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது!
Thursday, August 22nd, 2019
மலேசியாவின் செலாங்கூர் மாநிலத்தில் உள்ள தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு மையத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 32 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
50க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் சோதிக்கப்பட்ட நிலையில், சட்டவிரோத குடியேறிகளாக அறியப்பட்ட இவர்கள் கைது செய்யப்பட்டனர் என செலாங்கூர் குடிவரவுத்துறை இயக்குனர் முகத் சுக்ரி நவ்ரி தெரிவித்துள்ளார்.
“இதில் கைது செய்யப்பட்ட 32 பேரில் 31 பேர் (21 ஆண்கள், 10 பெண்கள்) இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்,” என அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் அப்பகுதியில் தோட்டக்காரர்களாக பணியாற்றி வந்திருக்கின்றனர்.
இவர்கள் மீது குடிவரவு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், அனைவரும் குடிவரவு தடுப்பு மையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
கொரோனா வைரஸ் : 7000 குற்றவாளிகள் விடுதலை !
உக்ரைன் பேச்சு குழுவில் ரஷ்ய உளவாளி - உக்ரைன் பாதுகாப்பு அமைப்பு சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல்!
தமிழ்நாட்டிற்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ஆயிரத்து 201 கோடி - அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு!
|
|
|


