ஜனாதிபதி பதவியிலிருந்து விலக வேண்டும் என எகிப்தில் ஆர்ப்பாட்டம்.!

Sunday, September 22nd, 2019


எகிப்திய ஜனாதிபதி அப்துல் பட்டா அல் சீசி பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எகிப்தில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தலைநகர் கெய்ரோ மற்றும் ஏனைய நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் ஒரே நேரத்தில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் காவற்துறையினர் துரித கதியில் செயற்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தியுள்ளனர்.

டாஹ்ரி சதுக்கத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பல ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்துள்ளனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு இதே இடத்தில் இடம்பெற்ற பாரிய எதிர்ப்பு நடவடிக்கையை அடுத்து அப்போதைய எகிப்தின் தலைவர் பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார்.

இந்த சம்பவத்தினை அடுத்து எகிப்தில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கு சட்டரீதியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சிறிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts: