சீன நிறுவனங்களுக்கு ஆபத்து!
Saturday, September 28th, 2019
அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள சீன நிறுவனங்களை அகற்றுவதற்கான திட்டத்தை டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக ரொயிடர் செய்தி வெளியிட்டுள்ளது.
இது அமெரிக்க-சீனா வர்த்தகப் போரை தீவிரப்படுத்தும் என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், அமெரிக்காவும் சீனாவும் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக வர்த்தகப் போரில் ஈடுபட்டு வரும் நிலையில், இரு தரப்பினரும் அக்டோபர் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் அமெரிக்காவில் சந்தித்து பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க பங்குச் சந்தையில் 156 சீன நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன, அவற்றில் 11 நிறுவனங்கள் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி ஊர்வலம் ஆரம்பம்!
இலங்கை தொடர்பில் தமிழ் நாடு முதலமைச்சர் மோடிக்கு கடிதம்!
உலகை உலுக்கிய குழந்தை அய்லான் குர்தியின் மரணம் - 3 பேருக்கு 125 ஆண்டு சிறை!
|
|
|


