கென்யாவில் வகுப்பறை கட்டிடம் இடிந்து விழுந்து 7 குழந்தைகள் உயிரிழப்பு!
Monday, September 23rd, 2019
கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் இன்று பாடசாலை ஒன்றின் வகுப்பறை கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியின் டகோரேட்டி புறநகர் பகுதியில் வாழ்வாதாரத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளில் ஒன்றான வீடின்றி இவர்களில் பலர் கூடாரம் அமைத்து குடும்பம் நடத்துகின்றனர்.
இங்குள்ள குழந்தைகள் படிப்பதற்காக இயங்கிவரும் திறன் மேம்பாட்டு பாடசாலையில் ஒரு வகுப்பறை திடீரென்று இடிந்து விழுந்து தரைமட்டமானது.
இந்த இடிபாடுக்குள் வகுப்பில் இருந்த குழந்தைகள் அனைவரும் சிக்கிக் கொண்டதுடன், மீட்பு படையினர் 7 குழந்தைகளை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
உயிருடன் மீட்கப்பட்ட மேலும் பல குழந்தைகள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
தற்காலிக இடங்களில் தங்கவைத்து மருத்துவ பரிசோதனை - அவுஸ்திரேலிய அரசாங்கம்!
டில்லியில் ரஷ்ய வர்த்தக, தொழில்துறை அலுவலகம் திறப்பு!
எத்தகைய சவால்கள் வந்தாலும் பாலஸ்தீன மக்களின் மண்ணை விட்டு வெளியேற மாட்டார்கள் - பாலஸ்தீன ஜனாதிபதி மஹ...
|
|
|


