கலிபோர்னியா காட்டுத்தீ – 2 மில்லியன் மக்களுக்கு மின்சாரம் துண்டிப்பு!
Sunday, October 27th, 2019
அமெரிக்காவின் வடக்கு மற்றும் மத்திய கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டு தீ காரணமாக 2 மில்லியனிற்கும் அதிகமான மக்கள் மின்சாரமின்றி அவதியுறுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
காட்டுத் தீ ஏற்கெனவே பல்லாயிரக்கணக்கான மக்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வைத்துள்ளதோடு பல வீடுகள் கட்டடங்களும் சேதமடைந்துள்ளன.
குறித்த பகுதியில் பலத்த காற்று வீசுவதனால், காட்டுத் தீ மேலும் பரவாமல் தடுக்கும் நோக்கதிற்காக, 36 மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நேற்று (26) சனிக்கிழமை இரவுமுதல் திங்கட்கிழமை (28) மதியம் வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Related posts:
48 மணி நேரத்தில் சோமாலியாவில் 110 பேர் பட்டினியால் பலி!
ஆர்மீனிய பிரதமர் பதவி இராஜினாமா!
பிரான்சில் குண்டுவெடிப்பு!
|
|
|


