இரண்டாம் உலகப்போர் விமானம் வீழ்ந்து பலர் காயம்?

அமெரிக்காவில் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் பலர் படுகாயமடைந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் Connecticut-ல் இருக்கும் Bradley சர்வதேச விமானநிலையத்தில் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட B-17 என்ற விமானம் தரையிரங்கியுள்ளது.
அப்போது எதிர்பார்தவிதமாக கட்டுப்பாட்டை இழந்த விமானம், அங்கிருந்து கீழே விழுந்து நொறுங்கியது. இதனால் விமானத்தில் பலர் படுகாயமடைந்திருக்கலாம் எனவும், ஆனால் விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து விமானநிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று காலை விபத்து நடந்தது உண்மை தான், தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினர் பற்றி எரியும் விமானத்தை அணைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|